சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர், கோட்டூர்புரத்தில் விடுதியில் தங்கி அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் கடந்த 17-ம் தேதி நடைப்பயிற்சியின் போது அங்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்தனர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தது அடையாறில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் அரவிந்த் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அரவிந்தின் தந்தை விசிகவின் முக்கிய பிரமுகராக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.