கோப்புப் படம்

 
க்ரைம்

உயிரிழந்தவர் பெயரில் பத்திரம் தயாரித்து நில மோசடி: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

துரைப்​பாக்​கம்: சென்னை ஒக்​கி​யம் துரைப்​பாக்​கம் மது​ராபேட்டை கிராமத்​தில் உள்ள குடும்ப பாரம்​பரிய நிலத்​தை, இறந்த நபரின் பெயரில் போலி கையெழுத்​திட்டு அபகரித்​த​தாக எழுந்​துள்ள புகாரின் பேரில், தாம்​பரம் மாநகர காவல்​துறை​யின் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இதுகுறித்து சென்னை தி.நகர் மதுரை வீரன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சி.ஆல​யம்​மாள் என்​பவர் அளித்த புகாரில், அவரது தந்தை சி.குப்​பு​சாமி கடந்த 1973-ம் ஆண்டு (02.01.1973) உயி​ரிழந்த நிலை​யில், அவர் உயிருடன் இருந்​தது போல் போலி கையெழுத்​திட்டு 12.05.1981 தேதி​யிட்ட கிரயப்​பத்​திரம் உரு​வாக்​கப்​பட்​ட​தாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

புகாரின்​படி, ஒக்​கி​யம் துரைப்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள 7 சென்ட் நிலத்​தில் 2.5 சென்ட் நிலம் மல்​லிகா என்​பவருக்கு விற்​பனை செய்​யப்​பட்​ட​தாக போலி ஆவணம் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. பின்​னர் அந்த நிலம் மல்​லி​கா​விட​மிருந்து வேல்​முரு​கன், அதன் பின்​னர் மரிய மிக்​கேல் என்​பவரின் பெயருக்கு மாற்​றப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வாரிசு சான்​றிதழின்​படி ஆலயம்​மாள் மற்​றும் அவரது சகோ​தரர் சீனி​வாசன் மட்​டுமே சட்​டப்​பூர்வ வாரிசுகள் எனக் கூறப்​படும் நிலை​யில், நிலத்தை அபகரிக்​கும் நோக்​கில் போலி ஆவணங்​கள் தயாரிக்​கப்​பட்​ட​தாக புகாரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாக கூறப்​படும் வெங்​கடேசன், மல்​லி​கா, வேல்​முரு​கன், மரிய மிக்​கேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மனு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

புகாரின் அடிப்​படை​யில் மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​சார் வழக்​குப்​ப​திவு செய்​து, சம்​பந்​தப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் பத்​திரப் பதிவு​களை ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இது​வரை யாரும் கைது செய்​யப்​ப​டாத நிலை​யில், குற்​றச்​சாட்​டுக்கு உட்​பட்ட நபர்​களை போலீஸார்​ தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT