பார்த்திபன், சீனிவாசன்

 
க்ரைம்

கே.வி.குப்பம் வங்கியில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ.1.07 கோடி மோசடி

நகை மதிப்பீட்டாளர்கள் இருவர் கைது

செய்திப்பிரிவு

வேலூர்: கே.​வி.குப்​பம் அருகே வங்கி யில் கவரிங் நகை​களை அடமானம் வைத்து ரூ.1.07 கோடி மோசடி செய்​த​தாக வங்​கி​யின் நகை மதிப்​பீட்​டாளர்​கள் இரு​வரை வேலூர் மாவட்ட குற்​றப்​பிரிவு காவல் துறை​யினர் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

வேலூர் மாவட்​டம் கே.​வி.குப்​பம் அடுத்த மேல் காவனூரில் தேசிய மயமாக்​கப்​பட்ட வங்​கி​யின் கிளை இயங்கி வரு​கிறது. இந்த வங்​கி​யில் சின்ன வடு​கன்​தாங்​கல் கிரா​மத்​தைச் சேர்ந்த பார்த்​திபன் (32), என்​பவர் கடந்த 3 ஆண்​டு​களாக நகை மதிப்​பீட்​டாள​ராக பணி​புரிந்து வரு​கி​றார். கீழ் முட்​டு​கூர் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் சீனி​வாசன் (55) என்​பவ​ரும் அதே வங்​கி​யில் கடந்த 15 ஆண்​டு​களாக நகை மதிப்​பீட்​டாள​ராக பணி​புரிந்து வரு​கி​றார்.

இந்த வங்​கி​யில் சென்​னை​யில் இருந்து வந்த அதி​காரி​கள் குழு​வினர் அடமானத்​தில் இருந்த நகை​களை ஆய்வு செய்​தனர். அப்​போது, இருப்​பில் இருந்த தங்க நகை​களில் கவரிங் நகை​கள் இருந்​தது தெரிய​வந்​தது. நகை மதிப்​பீட்​டாளர்​கள் இரு​வ​ரும் இதற்கு உடந்தை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதுகுறித்​து, வேலூர் மாவட்ட குற்​றப்​பிரி​வில் வங்​கி​யின் மண்டல மேலா​ளர் யாசின் பாஷா (46) என்​பவர் புகார் அளித்​தார். அதன்​பேரில், காவல் துறை​யினர் விசா​ரணை நடத்​தி​ய​தில், இரு​வ​ரும் கூட்டு சேர்ந்து கவரிங் நகை​களை 16 நகை கடன்​கள் மூலம் 1,080 கிராம் தங்க நகை​களுக்​கான மதிப்​பீட்​டில் கடனை, நண்​பர்​கள் மற்​றும் உறவினர்​கள் பெயரில் கடந்த ஏப்​ரல் மாதம் முதல் கடந்த மாதம் வரை கடன் பெற்​றுள்​ளனர்.

இதன்​மூலம் ரூ.1 கோடியே 7 லட்​சத்து 28 ஆயிரம் பணத்தை பெற்று மோசடி செய்​துள்​ளனர். இந்த பணத்​தில் பெருந்​தொகையை பார்த்​தீபன், ஆன்​லைன் பங்கு வர்த்​தகத்​தில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்​ததுடன், ரூ.25 லட்​சம் அளவுக்கு வெளி வட்​டாரத்​தில் இருந்த கடனை​யும் அடைத்​துள்​ளார். இந்த மோசடி​யில் பார்த்​தீபன் பிர​தான குற்​ற​வாளி​யாக​வும் அவருக்கு சீனி​வாசன் உடந்​தை​யாக​வும் இருந்​துள்​ளார் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, தங்க நகை மோசடி வழக்​கில் ஈடு​பட்ட நகை மதிப்​பீட்​டாளர்​கள் பார்த்​தீபன் மற்​றும் சீனி​வாசன் ஆகி​யோரை காவல் துறை​யினர் கைது செய்து வேலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT