ராஜி
கண்ணகி நகர்: சென்னை கண்ணகி நகர் பகுதியில் 17 வயது கபடி வீராங்கனையான பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், கடந்த ஜூன் 26-ம் தேதி போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிறுமிக்கு பல ஆண்டுகளாக கபடி பயிற்சி அளித்து வந்த ராஜி, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை காரணம் காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து தலைமறைவான ராஜியை பிடிக்க செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், கொடைக்கானலில் பதுங்கியிருந்த ராஜியை கைது செய்த போலீஸார், சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.