க்ரைம்

நடிகர் ரவி மோகன் வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண்களை சிறை வைத்ததாக புகார்

செய்திப்பிரிவு

சென்னை: நகை திருட்டு தொடர்​பாக, நடிகர் ரவி மோகன் வீட்​டில் பணிப்​பெண்​கள் சிறை வைக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. சென்னை நீலாங்​கரை​யில் நடிகர் ரவி மோகன் வீடு உள்​ளது. அங்கு சிலர் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு ஒரு​வர் தொடர்பு கொண்​டு, நடிகர் ரவி மோகன் வீட்​டுக்கு வேலைக்​குச் சென்ற தனது தாய், மகன் வீடு திரும்​ப​வில்லை என்​றும், அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என்​றும் புகார் அளித்​த​தாக தெரி​கிறது.

இதையடுத்து நீலாங்​கரை போலீ​ஸார் உடனடி​யாக அங்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். அப்​போது வீட்​டுக்​குள் 2 பணிப்​பெண்​கள் மற்​றும் அவர்​களு​டன் வந்​திருந்த சிறு​வன் ஒரு​வன் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து போலீ​ஸார் நடிகர் ரவி மோக​னிடம் விசா​ரித்​த ​போது, வீட்​டில் பணி​யாற்றி வந்த பெண்​கள் நகை திருடிய​தாக சந்​தேகம் ஏற்​பட்​ட​தால், அது தொடர்​பாக அவர்​களிடம் விசா​ரித்து வந்​த​தாக அவரது தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

புகார் தந்தால் நடவடிக்கை

அப்​போது போலீ​ஸார், பொது​மக்​கள் யாராக இருந்​தா​லும் தாங்​களாகவே விசா​ரணை நடத்தி ஒரு​வரை வீட்​டில் தடுத்து வைக்​கக்​கூ​டாது என்​றும், ஏதேனும் புகார் இருந்​தால் காவல் நிலை​யத்​தில் தெரிவிக்க வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தினர்.

மேலும் நகை திருட்டு தொடர்​பாக உரிய புகார் அளித்​தால் சட்​டப்​படி விசா​ரணை நடத்​தப்​படும் என தெரி​வித்த போலீ​ஸார் வீட்​டிலிருந்த பணிப்​பெண்​கள், அவர்​களு​டன் இருந்த சிறு​வனை அனுப்பி வைத்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த சம்​பவம் தொடர்​பாக நீலாங்​கரை போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT