க்ரைம்

மது போதையில் வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: மது போதை​யில் வந்​ததை தட்​டிக் கேட்ட மனை​வியை ஆட்டோ ஓட்​டுநர் கத்​தி​யால் குத்​தி​யதோடு, தற்கொலையும் செய்து கொண்​டார்.

கோயம்​பேடு நெற்​குன்​றம், பி.எச். சாலை பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் ஆட்டோ ஓட்​டுநர் தேவ​ராஜ் (43). இவருக்கு சத்யா (37) என்ற மனை​வி​யும், பிள்​ளை​கள் பிரீத்தி (17), யாதவ் (16) உள்​ளனர்.

          

தேவ​ராஜ் மதுப் பழக்​கத்​துக்கு அடிமை​யாகி தின​மும் மது அருந்​தி​விட்டு வீட்​டுக்கு வந்து மனை​வி​யிடம் தகராறில் ஈடு​பட்டு வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் கணவன்​-மனைவி இடையே அடிக்​கடி சண்டை ஏற்​பட்டு வந்​துள்​ளது. இதே​போல் நேற்று முன்​தினம் இரவு மது போதை​யில் வீட்​டுக்கு வந்த தேவ​ராஜ் மனைவி சத்​யா​விடம் தகராறில் ஈடு​பட்​டுள்​ளார்.

அப்​போது இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு கைகலப்​பாக மாறி​யுள்​ளது. ஆத்​திரம் அடைந்த தேவ​ராஜ், சமையல் அறையி​லிருந்த கத்​தி​யால் மனை​வியை குத்​தி​யுள்​ளார்.

இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த மகனும் மகளும் கூச்​சலிட்​டனர். சத்​தம் கேட்டு வந்த அக்​கம் பக்​கத்​தினர் சத்​யாவை விரைந்து மீட்டு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.

மேலும் தேவ​ராஜை வீட்​டுக்​குள் தள்ளி வெளியே தாழ்ப்​பாள் போட்​டு​விட்டு கோ​யம்​பேடு போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். சம்பவ இடத்​துக்கு வந்த போலீ​ஸார் கதவை திறக்க முயன்​றபோது, கதவு உள்​பக்​கம் தாழ்ப்​பாள் போடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​த​போது, தேவ​ராஜ் தூக்​கிட்டு தற்கொலை செய்​தது தெரிய​வந்​தது. அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

சத்​யா​வுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக கோயம்​பேடு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT