க்ரைம்

சீர்காழி அருகே மனைவி, மகனை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை?

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மனைவி, மகனை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர் ஜலேந்திரன்(50). மீனவரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து, தற்போது சொந்த ஊரில் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்செல்வி(45), மகன் அதிகுணன்(25). மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். நேற்று காலை வெகு நேரமாகியும் ஜலேந்திரனின் வீடு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் வெட்டுக் காயங்களுடன் மலர் செல்வியும், அதிகுணனனும் உயிரிழந்துகிடந்த நிலையில், கொல்லைபுறத்தில் உள்ள மரத்தில் தூக்கில் ஜலேந்திரன் சடலமாக தொங்கினார். மாவட்ட எஸ்.பி. சினேகா பிரியா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பொருட்கள் வாங்கி வீட்டில் வைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஜலேந்திரன் இரும்புக் குழாயை எடுத்து மனைவி, மகன் ஆகியோரை அடித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT