சதீஷ்

 
க்ரைம்

சென்னை | வங்கிக்குள் புகுந்து மனைவியை கத்தியால் குத்திய கணவர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓட்​டேரி மங்​களபுரத்​தைச் சேர்ந்​தவர் ரெபேகா (27). இவர் அயனாவரம் ஏகாங்​கிபுரத்​தைச் சேர்ந்த சதீஷ் (37) என்​பவரை காதலித்து 2017-ம் ஆண்டு திரு​மணம் செய்து கொண்​டார்.

இவர்​களுக்கு 6 வயதில் பெண் குழந்தை இருந்​தது. கணவன்​-மனை​விக்கு இடையே ஏற்​பட்ட தகராறு காரண​மாக இரு​வரும் பிரிந்து வாழ்ந்து வந்​தனர். இந்நிலை​யில், கடந்த 2025-ம் ஆண்டு தனது மகளை சதீஷ் கொலை செய்​துவிட்டு, பின்​னர் தற்​கொலைக்கு முயன்றார்.

இது தொடர்​பாக புனித தோமையர்​மலை போலீஸார் சதீஷை கைது செய்தனர். பின்​னர் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ், மனைவி ரெபே​காவை மிரட்டி வந்​தார். இதுகுறித்து, ரெபேகா அளித்த புகாரின் பேரில் ஓட்​டேரி போலீ​ஸார் சதீஷை மீண்​டும் கைது செய்​தனர்.

பின்​னர் இந்த வழக்​கிலும் அவர் ஜாமீனில் வெளியே வந்​தார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் கீழ்ப்​பாக்​கத்தில் உள்ள தனி​யார் வங்​கி​க்கு சென்று அங்கு பணி​யாற்றி வந்த ரெபே​காவிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்​திருந்த கத்​தியை எடுத்து ரெபே​காவை சரமாரி​யாக வெட்​டி​னார்.

சத்​தம் கேட்டு வங்கி ஊழியர்​கள்,பொது​மக்​கள் ஓடி வந்து சதீஷை மடக்​கிப்பிடித்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். பலத்த காயமடைந்த ரெபேகா கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்​பாக கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சதீஷை கைது செய்​தனர். முன்​ன​தாக அவரிட​மிருந்து தாக்​குதலுக்கு பயன்​படுத்​தப்​பட்ட 2 கத்​தி​கள், ஒரு செல்​போன், 2 லிட்​டர் பெட்​ரோல், லைட்​டர், பைக் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்டன.

இந்​நிலை​யில், சதீஷ் போலீ​ஸாரிடம் அளித்துள்ள வாக்​குமூலத்தில், நாங்​கள் இரு​வரும் வெவ்​வேறு சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள். காதலித்து திரு​மணம் செய்து கொண்​டோம். அவரை நானே படிக்க வைத்​தேன்.

தற்​போது அவர் நல்ல நிலை​யில் இருப்​ப​தால் என்னை தவிர்க்க ஆரம்​பித்​தார். இதனால், ஏற்பட்ட விரக்​தி​யில் மகளை கொலை செய்​தேன். தற்​போது மனைவியும் என்னை வெறுக்​கிறார்.

இதனால், அவரை பெட்​ரோல் ஊற்றி கொளுத்​த​வும், தப்​பி​னால் கத்​தி​யால் குத்​தி​யும் கொலை செய்​யும் திட்​டத்​துடன் மனைவி பணிபுரி​யும் வங்​கிக்​குச் சென்​றேன். இதை அறிந்த காவலாளி இரும்பு நாற்​காலி​யால் தாக்கி என்னை நிலைகுலைய செய்​தார்.

எனினும், கத்​தி​யால் குத்தி கொலை செய்ய முயன்​றேன். வங்கி ஊழியர்​கள் பொது மக்​கள் தடுத்து விட்​டனர் என சதீஷ் தெரி​வித்​த​தாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT