க்ரைம்

‘நான் நிஷாந்த் பேசுறேன்’... ஒற்றை வார்த்தையால் உஷாரான ஓட்டுநர்: ஆம்னி பஸ்சை போலீஸார் சுற்றிவளைத்தது எப்படி?

ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிட்ட மதுரை ‘இன்ஸ்டா’ ஜோடி

செய்திப்பிரிவு

மதுரை: நகைக்​கடை கொள்​ளை​யில் ஈடு​பட்ட நிஷாந்த்தை ஆம்னி பேருந்து ஓட்​டுநர் போலீ​ஸில் சிக்க வைத்​தது எப்​படி என்ற தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன. ஆடம்​பர வாழ்க்​கைக்கு ஆசைப்​பட்டு மதுரை இன்ஸ்டா ஜோடி, கொள்ளை சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​தாக தெரிய​வந்​துள்​ளது.

மதுரை தனிஷ்க் நகைக்​கடை​யில் ரூ.21 கோடி மதிப்​பிலான தங்​கம். வைர நகைகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டன. இந்த வழக்​கில், மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மீனாட்சி, அவரது காதலர் நிஷாந்​தின் தந்தை ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். 5 நாட்​களாக தலைமறைவாக இருந்த முக்​கியக் குற்​றவாளி நிஷாந்த் தரு​மபுரி​யில் சிக்​கினார். தனியார் ஆம்னி பேருந்​தில் பெங்​களூரு​வி்ல் இருந்து சேலத்​துக்கு பயணம் செய்​த​போது தரு​மபுரி போலீ​ஸார் அவரை பிடித்​தனர்.

தனிப்​படை போலீ​ஸார் கண்​ணில் மண்​ணைத் தூவி​விட்டு பேருந்​துகள், ரயில்​களில் மாறிமாறி பயணம் செய்த நிஷாந்த், அவர் கடைசி​யாக பயணம் செய்த ஆம்னி பேருந்து ஓட்​டுநரின் சாதுர்​யத்​தால் சிக்​கிக் கொண்​டார்.

இது​குறித்து பேருந்து ஓட்​டுநர் அளித்​துள்ள வாக்​குமூலத்​தில், நிஷாந்த் பேருந்​தில் ஏறியது முதல் தரு​மபுரி போலீ​ஸாரிடம் சிக்​கியது வரையி​லான சம்​பவங்​களை விரிவாக தெரி​வித்​துள்​ளார்.

நிஷாந்த் பேருந்​தில் ஏறும்​போது, அவருடன் 3 இளைஞர்​கள் வந்​துள்​ளனர். அவர்​கள், ஆம்னி பேருந்து ஓட்​டுநரிடம் நைசாக பேச்சு கொடுத்து, நிஷாந்த்​துக்கு சாப்​பாடு வாங்​கிக் கொடுக்​குமாறு ரூ.500 கொடுத்​துள்​ளனர். நிஷாந்த் பேருந்​தில் ஏறியதும் படுக்​கை​யில் தூங்​கி​விட்​டார்.

ஓசூர் அருகே ராயக்​கோட்டை பைபாஸ் ரோட்​டில் சென்​றபோது, பயணிகள் டீ, காபி சாப்​பிட​வும், கழிவறை செல்​ல​வும் பேருந்து சிறிது நேரம் நிறுத்​தப்​பட்​டது. பயணிகள் அனைவரும் இறங்​கியபிறகு, நிஷாந்த், ஓட்​டுநரின் செல்​போனை வாங்கி யாரிடமோ பேசி​யுள்​ளார்.

அப்​போது, “நான் நிஷாந்த் பேசுகிறேன்” என்று அவர் கூறியுள்​ளார். இந்த வார்த்தை ஓட்​டுநர் காதில் விழுந்​தது. சந்​தேகமடைந்த ஓட்​டுநர், சமூக வலை​தளங்​களில் பரவும் மதுரை நகை்கடை கொள்​ளை​யன் நிஷாந்த் வீடியோக்களை​யும், அவரை​யும் மாறி மாறி பார்த்​துள்​ளார். ஆனால், நிஷாந்த் முகத்தை மறைத்து தொப்பி அணிந்​திருந்​ததால் அவரை சரியாக பார்க்க முடிய​வில்லை. ஓட்​டுநர் தனது சந்​தேகத்தை நடத்​துநரிடம் கூறியுள்​ளார். உடனடி​யாக ஓட்​டுநர், தனது நண்​பரான தரு​மபுரி அதி​ய​மான் கோட்டை காவல்​நிலை​யத்​தில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒரு​வரிடம் கூறியுள்​ளார்.

அவர், உயர் அதி​காரி​களுக்கு தகவலை தெரி​விக்க, அவர்​களின் ஆலோ​சனைப்​படி, ஆம்னி பேருந்து தரு​மபுரி அருகே சேஷம்பட்டியில் உள்ள ஒரு டீ கடை​யில் நிறுத்​தப்​பட்​டது.

பயணிகள் அனைவரும் இறங்​கிய நிலை​யில் போலீ​ஸார் பேருந்தை சுற்​றி வளைத்​தனர். தன்னை போலீ​ஸார் மடக்​கி​விட்​டதை உணர்ந்த நிஷாந்த், ஓட்​டுநரின் இருக்கை வழி​யாக குதித்து தப்​பியோட முயன்​றார். போலீ​ஸார் சுற்​றிவளைத்து கைது செய்​தனர்.

ஓட்​டுநரின் சந்​தேகம், அவரது சாமர்த்​தி​ய​மான செயல்​பாடுகளே, கொள்​ளை​யன் நிஷாந்த் சிக்​கு​வதற்கு முக்​கிய காரண​மாக இருந்​த​தாக தனிப்​படை போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

தனிப்​படை போலீ​ஸார் கூறிய​தாவது: மீனாட்சி, அவரது அம்​மாவின் யூ டியூப், இன்ஸ்டா பதிவு​களுக்கு வீடியோக்​களை எடுப்​பது, அதை நேர்த்​தி​யாக எடிட் செய்​வது போன்​றவற்​றில் நிஷாந்த் உதவியுள்​ளார்.

சோசி​யல் மீடி​யாவால் கை நிறைய சம்​பாதிக்க முடிய​வில்லை, நல்ல வேலை​யும் கிடைக்​க​வில்லை என்ற ஏக்​கத்​தில் நிஷாந்த் கடன் வாங்கி செலவு செய்​துள்​ளார். அத​னால், நண்​பர்​கள், குடும்​பத்​தினரிடம் அவ​மானப்​பட்​டுள்​ளார். மீனாட்​சி​யும் மதுரையில் புதிதாக கட்​டும் வீட்​டுக்கு போதிய பணமில்​லாமல் சிரமப்​பட்​டுள்​ளார். இத​னால், ஆடம்​பர வாழ்க்​கைக்கு ஆசைப்

​பட்டு இரு​வரும் இணைந்து, பெரிய கொள்​ளையை நடத்தி வாழ்க்​கை​யில் செட்​டில் ஆக முடிவெடுத்​துள்​ளனர்.

கொள்ளை சம்​பவத்​தில் ஈடு​படும் முன்​பாக, நகைக்​கடை​யில் எப்​படி கொள்​ளை​யடிப்​பது, உடைக்​காமல் ரேக்​கு​களில் உள்ள நகைகளை கொள்​ளை​யடிப்​பது, ‘லிப்ட்’டில் நுழைந்து எப்​படி வெளியே வரு​வது, நகைக்​கடைக்​குள் இருக்​கும் சிசி​டிவி கேம​ராக்​களை எப்​படி செயலிழக்க வைப்​பது ஆகியவை பற்றி சமூக வலை​தளங்​களில் வீடியோக்​களை நிஷாந்த் பார்த்​துள்​ளார்.

கொள்ளை அடிப்​ப​தற்கு முன்பு கடைக்கு அடிக்​கடி வாடிக்​கை​யாளராக வரும் போதெல்​லாம் தொப்பி அணிந்து முகத்தை மறைத்​தது, கொள்​ளை​யடித்த நேரத்​தில் நம்​பர் பிளேட் இல்​லாத ‘ஸ்​கூட்டி’யை பயன்​படுத்​தி​யது​தான் நிஷாந்த் செய்த தவறு, அது​தான் போலீ​ஸார் துப்​புதுலக்க உதவியாக இருந்​துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT