சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மகிபூர் என்பவர் எம்ஜிஆர் நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் வீட்டில் தங்கி, வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை மனைவியுடன் அவர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த ஒருவர் மகிபூரின் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
போலீஸார் விசாரணையில் இவர் மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து எம்ஜிஆர் நகர் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.