க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.4 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. தாய்​லாந்​தில் இருந்து கஞ்​சாவை கடத்தி வந்த மலேசியா இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்து பயணி​கள் விமானம் சென்​னைக்கு நேற்று முன்​தினம் நள்​ளிரவு வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்பி கொண்​டிருந்​தனர்.

அப்​போது வந்த மலேசி​யாவை சேர்ந்த இளைஞர் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் தாய்​லாந்​தில் இருந்து வந்த அவரை​யும், அவரது உடைமை​களை அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அப்​போது, உடைமை​களில் ரூ.4 கோடி மதிப்​புள்ள உயர்ரக ஹைட்​ரோ​போனிக் கஞ்சா 4 பார்​சல்​களில் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​ததை அதி​காரி​கள் கண்​டு​பிடித்​தனர்.

இதையடுத்​து, கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், அவரை கைது செய்து விசா​ரணை நடத்​தினர். முதல்​கட்ட விசா​ரணை​யில், போதைப்​பொருள் கடத்​தும் கும்​பலிடம் கடத்​தல் குரு​வி​யாக செயல்​படு​வது தெரிய​வந்​தது. அவரிடம் தொடர்ந்து அதி​காரி​கள் வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT