பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் கடத்திய படகு.

 
க்ரைம்

இந்திய பெருங்கடலில் கடத்திய ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்

6 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இந்​தி​யப் பெருங்​கடலில் மீன்​பிடி படகில் கடத்திய ரூ.100 கோடி மதிப்​பிலான 323 கிலோ எடை​யுள்ள ஹெரா​யின் போதைப் பொருளை இலங்கை கடற்​படை​யினர் பறி​முதல் செய்து 6 பேரை கைது செய்​தனர்.

சர்​வ​தேச கடற்​பகு​தி​யில் போதைப் பொருட்​களை கடத்​திச் செல்​லும் படகு​கள் மற்​றும் கப்​பல்​கள் பற்றி இலங்கை கடற்​படை​யினர் தொடர்ந்து தேடு​தல் நடவடிக்​கை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

          

இலங்​கை​யின் தெற்​குப் பகு​தி​யிலுள்ள திக்​கோ​விட்​ட​வில் இருந்து 60 கடல் மைல் தொலை​வில் இந்​தி​யப் பெருங்​கடலில் சந்​தேகத்​துக்​குரிய ஆழ்​கடல் மீன்​பிடி படகைக் கண்​டனர்.

இதையடுத்து அந்​தப்​படகை இலங்கை கடற்​படை​யினர் ரோந்து கப்​பலில் சுற்றி வளைத்​தனர். பின்​னர் படகில் சோதனை செய்​த​போது 298 பொட்​டலங்​களில் பதுக்கி வைத்​திருந்த 323 கிலோ ஹெராயின் போதைப்​பொருள் கண்டறியப்பட்டு பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இதன் சர்​வ​தேச மதிப்பு ரூ.100 கோடி ஆகும். படகி​லிருந்த இலங்​கை​யைச் சேர்ந்த 6 பேரை கடற்​படை​யினர் கைது செய்​தனர். பறிமுதலான போதைப் பொருட்களுடன் 6 பேரையும் திக்கோவிட்ட கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

இந்தப் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, கடத்தலில் தொடர்புடையோர் யார் என்பது குறித்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT