க்ரைம்

‘ஹாஷ்பே கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு: ரூ.146 கோடி சுருட்டிய மேலும் இருவர் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கிரிப்​டோகரன்​சி​யில் முதலீடு செய்​தால் அதிக லாபம் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.146 கோடி வரை நிதி மோசடி​யில் ஈடு​பட்ட விவ​காரத்​தில், மேலும் இரு​வரை அமலாக்​கத்​துறை கைது செய்​துள்​ளது.

புதுச்​சேரி சைபர் குற்​றப் பிரிவு காவல்​துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், ‘ஹாஷ்பே’ கிரிப்​டோகரன்சி மோசடி தொடர்​பாக அமலாக்​கத்​துறை சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடைச் சட்​டத்​தின்​கீழ் விசா​ரணை​யைத் தொடங்​கியது.

இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த செப்​.1-ம் தேதி சென்​னை, கோவை, கொல்​கத்தா உட்பட 11 இடங்​களில் அமலாக்​கத்​துறை அதிரடி சோதனை நடத்​தி​யது. அதில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களின் அடிப்​படை​யில், அமலாக்​கத்​துறை விசா​ரணை​யைத் தொடர்ந்​தது.

முதற்​கட்ட விசா​ரணை​யில், ‘ஹிதேஷ் குமார், இம்​ரான் பாஷா, சையது உஸ்​மான் மற்​றும் தாமோதரன் உள்​ளிட்​டோர் இணைந்து ஹாஷ்பே என்ற பெயரில் ஒரு போலி முதலீட்​டுத் திட்​டத்தை உரு​வாக்​கியது தெரிய​வந்​தது.

மேலும், ‘டிசிஎக்​ஸ்’ (TCX) எனப்​படும் கிரிப்​டோகரன்சி வர்த்தக தளம் மூலம் குறுகிய காலத்​தில் அதிக லாபம் ஈட்​டலாம் என ஆசை வார்த்தை கூறி முதலீட்​டாளர்​களைக் கவர்ந்​துள்​ளனர்.

இந்​தத் திட்​டத்தை உண்​மை​யானது என நம்ப வைப்​ப​தற்​காக, பாலிவுட் பிரபலங்​களைப் பங்​கேற்​கச் செய்து ஆடம்​பர​மான அறி​முக விழாக்​கள், கார் விருது வழங்​கும் நிகழ்ச்​சிகள் மற்​றும் மும்​பை​யில் உள்ள ஒரு சொகுசுக் கப்​பலில் பிரம்​மாண்ட நிகழ்​வு​களை நடத்​தி​யுள்​ளனர்.

மேலும், சமூக ஊடக விளம்​பரங்​கள் மற்​றும் ‘ரெஃபரல் கமிஷன்’ முறையை​யும் பயன்​படுத்தி அப்​பாவி முதலீட்​டாளர்​களை வலை​வீசிப் பிடித்​துள்​ளனர்’ என்று தெரிய​வந்​தது. இதையடுத்​து, இந்த மோசடி​யில் தொடர்​புடைய ஹிதேஷ் குமார், இம்​ரான் பாஷா ஆகிய இரு​வரை​யும் அமலாக்​கத்​துறை கடந்த 6-ம் தேதி கைது செய்து சிறை​யில் அடைத்​தது.

தலைமறை​வாக இருந்த மற்ற குற்​ற​வாளி​களைத் தேடி வந்த நிலை​யில், கடந்த 22-ம் தேதி சையது உஸ்​மான் மற்​றும் அவரது கூட்​டாளி தாமோதரன் ஆகிய இரு​வரை​யும் அமலாக்​கத்​துறை கைது செய்​துள்​ளது.

அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில் அமலாக்​கத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: முதலீட்​டாளர்​களிடம் இருந்து ரொக்​க​மாக ரூ.16 கோடி​யும், ‘ஹைஃபி சர்க்​கிள்’ என்ற பெயரிலான வங்கி கணக்கு மூலம் ரூ.10.52 கோடி​யும், கிரிப்​டோகரன்சி மூலம் ரூ.120 கோடி​யும் என மொத்​தம் ரூ.146 கோடி வரை இவர்​கள் திரட்​டி​யுள்​ளனர்.

சையத் உஸ்​மான் பெரு​மளவி​லான ரொக்க முதலீடு​களைக் கையாண்​டதுடன், நிதி​யைத் திரட்​டப் ‘ஹைஃபி சர்க்​கிள்’ வங்​கிக் கணக்​கை​யும் இயக்கி வந்​துள்​ளார். தாமோதரன் ‘ஹாஷ்பே’ மென்​பொருள், தரவுத்​தளம் மற்​றும் தளத்​தின் வாலட் செயல்​பாடு​கள் உள்​ளிட்ட கிரிப்​டோகரன்சி சார்ந்த தொழில்​நுட்ப நிர்​வாகத்​தைக் கவனித்து வந்​துள்​ளார்.

குற்​றத்​தின் மூலம் ஈட்​டப்​பட்ட இந்த பெருந்​தொகை, சையத் உஸ்​மான், தாமோதரன், அவர்​களின் குடும்ப உறுப்​பினர்​கள் மற்​றும் தொடர்​புடைய நிறு​வனங்​களின் தனிப்​பட்ட வங்​கிக் கணக்​கு​களுக்​குத் திசை​திருப்​பப்​பட்​டுள்​ளது.

அந்த நிதி​யைக் கொண்டு கிரிப்​டோகரன்சி மற்​றும் அசை​யாச் சொத்​துக்​களில் முதலீடு செய்​ததும் அம்​பல​மாகி​யுள்​ளது. தற்​போது கைது செய்​யப்​பட்​டுள்ள சையத் உஸ்​மான் மற்​றும் தாமோதரன் ஆகிய இரு​வரும் நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த மோசடித் தொடர்​பில் மேல் வி​சா​ரணை தீவிர​மாக நடை​பெற்​று வரு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT