க்ரைம்

திருவள்ளூர்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: வேப்​பம்​பட்டை சேர்ந்த சீனி​வாசன் (57) பெயிண்டராக பணி புரிந்து வந்​தார். இவரது மனை​வி​யின் சகோதரி, தன் கணவர் பிரிந்து சென்​ற​தால் ஆதர​வில்​லாமல் இருந்ததால், சீனி​வாசன் குடும்​பத்​தினருடன், இரட்​டையர்​களான 13 வயதுள்ள தன் 2 மகள்​களு​டன் தங்கி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சீனி​வாசன் கடந்த 2023-ம் ஆண்டு இரட்டை சிறுமிகளில் ஒரு​வரை பாலியல் வன்​கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். தொடர்ந்​து, மற்​றொரு சிறுமியை பாலியல்​ ரீதியாக துன்​புறுத்தி வந்​துள்​ளார்.

சிறுமி​யின் தாய் பூந்​தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சீனிவாசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்​யப்பட்டார். இந்த வழக்கு விசா​ரணை முடிவுக்கு வந்தது.

இதையடுத்​து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமாமகேஸ்​வரி, சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளாக்​கிய குற்​றத்​துக்​கு, சீனி​வாசனுக்கு 39 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை, ரூ.45 ஆயிரம் அபராத​ம் விதித்துள்ளார்.

மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமிகளில், முதல் சிறுமிக்கு ரூ.3.50 லட்சம், 2-வது சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்க அரசுக்​கு பரிந்​துரைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT