க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டி

செய்திப்பிரிவு

கரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்​தவரை ஓட ஓட விரட்டி சிறுமி​யின் பாட்டி அரி​வாளால் வெட்​டியது குளித்தலை அருகே பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கரூர் மாவட்​டம் குளித்​தலை அருகே உள்ள பகு​தி​யைச் சேர்ந்​தவர் தங்​க​ராசு மகன் விஜய் என்ற மாணிக்​கம் (31). இவர், ஆக.9-ம் தேதி 4 வயது சிறுமியை இருசக்கர வாக​னத்​தில் அழைத்​துச் சென்​று, அவரது வீட்​டில் வைத்து பாலியல் தொல்லை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து சிறுமி அவரது பாட்​டி​யிடம் தெரி​வித்​ததையடுத்​து, குளித்​தலை அரசு மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​யில் சிறுமி சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று மாணிக்​கத்தை பிடித்​து, அவரை குளித்​தலை காவல் நிலை​யத்​துக்கு சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர்கள் அழைத்​துச் சென்றனர். வழி​யில், ஆத்​திரமடைந்த பாட்​டி, தான் மறைத்து வைத்​திருந்த அரி​வாளால் மாணிக்​கத்தை ஓட ஓட விரட்டி வெட்​டி உள்​ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குளித்​தலை போலீ​ஸார் அரி​வாளை பறி​முதல் செய்​து, மாணிக்​கத்தை மீட்டு சிகிச்​சைக்​காக குளித்​தலை அரசு மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். பின்​னர், சிறுமியின் பாட்​டியை காவல் நிலை​யத்​துக்​கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT