கோப்புப் படம்
சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்று சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது.
அப்போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பிய கேரள இளைஞரின் உடைமைகளை சோதனை செய்த போது, உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளில் ரூ.5 கோடி மதிப்புள்ள 4 கிலோ 970 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்தனர்.
ஜிபிஎஸ் பறிமுதல் கர்நாடக மாநிலம் மங்களூர் செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய நேற்று வந்த ஆகாஷ் (33) என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்பது தெரிய வந்தது. விமானத்தில் சேட்டிலைட் போன், ஜிபிஎஸ் கருவியை எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பதால், அந்த ஜிபிஎஸ் கருவியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.