ஆடு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

 
க்ரைம்

ஈசிஆரில் ஆடுகளைத் திருடிய கும்பல் சிக்கியது: கறிக்கடைக்காரர் உள்ளிட்ட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

முட்டுக்காடு: கிழக்​குக் கடற்​கரைச் சாலை​யில் முட்​டுக்​காடு, கானத்​தூர், பனையூர் உள்​ளிட்ட பகு​தி​களில் ஆடு​களைத் திருடி வந்த கறிக்​கடை உரிமை​யாளர் உள்​ளிட்ட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

முட்​டுக்​காடு ஊராட்​சிக்கு உட்​பட்ட மஞ்​சள்​போடு பகு​தி​யைச் சேர்ந்த பலரது வீடு​களில் வளர்க்​கப்​பட்ட ஆடு​கள் கடந்த 2 மாதங்​களாகத் தொடர்ந்து திருடப்​பட்டு வந்​தன.

இதையடுத்து அவர்​கள் கானத்​தூர் போலீ​ஸில் கடந்த வாரம் புகார் அளித்​தனர். இதன்​பேரில் தனிப்​படை அமைக்​கப்​பட்டு ஆடு திருடர்​களைத் தேடும்​பணி நடை​பெற்​று​வந்​தது.

கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்​த​போது, மர்ம நபர்​கள் முதலில் இருசக்கர வாக​னங்​களில் வந்து ஆடு​கள் இருக்​கும் இடங்​களைக் கண்​காணிப்​பதும், பின்​னர் கார் அல்​லது ஆட்​டோ​வில் வந்து ஆடு​களைத் திருடிச் செல்​வதும் தெரிய​வந்​தது.

இதையடுத்து தீவிர விசா​ரணை நடத்​திய போலீ​ஸார், சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்த மணி​கண்​டன் (32), கதிர​வன் (22) ஆகியோரை கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், திருடிய ஆடு​களை, கொட்​டி​வாக்​கம் வெங்​கடேசபுரத்​தில் கறிக்​கடை நடத்தி வரும் மோத்தி பாபு (40) என்​பவரிடம் விற்​பனை செய்​த​தாகக் கூறினர். இதையடுத்து மோத்தி பாபுவை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

மோத்தி பாபு மீது 2022-ம் ஆண்டு வேதா​ரண்​யம் காவல் நிலை​யத்​தில் ஆடு திருடிய வழக்கு நிலு​வை​யில் இருப்​பது தெரிய​வந்​தது.

மோத்தி பாபு, மணி​கண்​டன், கதிர​வன் ஆகிய மூவரும் இணைந்து இது​வரை 25-க்​கும் மேற்​பட்ட ஆடு​களைத் திருடியது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

தொடர்ந்​து, கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள மோத்தி பாபு​வின் கறிக்​கடையி​லிருந்து 3 ஆடு​களும், மணி​கண்​டனின் மாமி​யார் வீட்​டிலிருந்து 2 ஆடு​களும், நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள கிடங்​கில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த 10 ஆடு​களும் என மொத்​தம் 15 ஆடு​களை போலீ​ஸார் மீட்​டனர்.

இதையடுத்து மணி​கண்​டன், கதிர​வன், மோத்தி பாபு ஆகிய மூவரை​யும் போலீ​ஸார் கைது செய்​து, சோழிங்​கநல்​லூர் மாவட்ட குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT