க்ரைம்

அரூர் பகுதியில் அரசுப் பள்ளிகளின் ஆய்வகங்களை உடைத்து கணினி ஹார்டு டிஸ்க்குகளை திருடும் கும்பல்

மாணவர்களின் கல்வி பாதிக்கும் என ஆசிரியர்கள் அச்சம்

எஸ்.செந்தில்

அரூர்: அரசுப் பள்​ளி​களில் நுழையும் மர்ம நபர்​கள் ஆய்​வகத்​தில் உள்ள கணி​னிகளின் ஹார்டு டிஸ்க்கு​கள், மதர் போர்​டுகளை குறிவைத்து திருடிச் செல்​வ​தால் மாணவர்​களின் கல்வி பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக அரூர் பகுதி​யில் உள்ள பள்​ளி​களின் ஆசி​ரியர்​கள் அச்​சம் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் உள்ள அரசு உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் தகவல் தொடர்பு தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்​தும் நோக்​கில் உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் (ஹை-டெக் லேப்​கள்) உள்​ளன. தற்​போது நடுநிலைப் பள்​ளி​களுக்​கும் இந்த வசதி விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

ஒரு நடுநிலைப் பள்​ளிக்​குத் தலா 10 கணி​னிகள், புரொஜெக்​டர், சர்​வர் மற்​றும் இணை​யதள வசதி​கள் ஆகியவை ஆய்​வகங்​களில் செய்து தரப்​படு​கின்​றன. மாணவர்​களிடம் டிஜிட்​டல் அறிவு, படைப்​பாற்​றல், ஆங்​கில மொழித்​திறன் மற்​றும் கணினி சார்ந்த செயல்​பாடுகளை வளர்ப்​பதே இதன் முக்​கிய நோக்​க​மாகும்.

இத்​திட்​டத்​தின்​கீழ் தரு​மபுரி மாவட்​டம் அரூர் வட்​டாரத்​துக்​குட்​பட்ட 37 நடுநிலைப் பள்​ளி​களில் ஹைடெக் லேப்​கள் செயல்​பாட்​டில் உள்​ளன. கடந்த சில நாட்​களாக அரூர் பகுதியில் உள்ள அரசுப் பள்​ளி​களில் கணி​னிகளை குறிவைத்து மர்ம நபர்​கள் திருட்டு சம்​பவங்​களில் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

கடந்த 4-ம் தேதி அச்​சல்​வாடி​யில் உள்ள அரசு நடுநிலைப்​பள்​ளி​யில் கணினி ஆய்​வகத்​தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்​பல் 10 ஹார்டு டிஸ்க்கு​கள், மதர்போர்​டுகள் உள்​ளிட்ட கணி​னி​யின் முக்​கிய பொருட்​களை திருடிச் சென்​றது. இதேபோல, கடந்த 5-ம் தேதி கீழானூரில் உள்ள நடுநிலைப் பள்​ளி​யில் 10 ஹார்டு டிஸ்க்கு​கள், மதர்​போர்​டுகள் உள்​ளிட்​ட​வையும், 23-ம் தேதி சோரியம்​பட்​டி​யில் உள்ள பள்​ளி​யில் 11 ஹார்டு டிஸ்க்கு​கள், மதர்​போர்​டுகள் உள்​ளிட்​ட​வையும் திருடப்​பட்​டிருந்​தன. ஏற்​கெனவே, கடந்த மாதத்​தில் பள்​ளிப்​பட்டி, அம்​பாலப்​பட்டி, பாப்​பிரெட்​டிப்​பட்டி மற்​றும் அரூர் நகர் பகுதி​களில் உள்ள சில பள்​ளி​களி​லும் கணினி ஆய்​வகத்​தில் திருட்டு நடந்​தது.

இதன் தொடர்ச்​சி​யாக நேற்று முன்​தினம் இரவு அரூர் நக​ராட்சி ராயப்​பன்கொட்​டாய் நடுநிலைப் பள்​ளி​யிலும் மர்ம நபர்​கள் புகுந்து 10 ஹார்டு டிஸ்க்கு​கள், மதர் போர்டு, அங்​கிருந்த கண்​காணிப்பு கேம​ராவின் மெமரி கார்டு உள்​ளிட்​ட​வற்றை திருடிச் சென்​றுள்​ளனர்.

இந்த தொடர் திருட்டு குறித்து கல்​வித் துறை​யினர் மற்​றும் ஆசி​ரியர்​கள் கூறும்​போது, “அரசுப் பள்​ளி​களில் நடை​பெறும் கணினி திருட்​டால் மாணவர்​களுக்கு கல்வி கற்​பிப்​ப​தில் பெரும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. ஆய்​வகத்​தின் பூட்டை உடைத்து உள்ளே நுழையும் கும்​பல், கணி​னி​யில் விலை உயர்ந்த பொருட்​களை மட்​டும் திருடிச் செல்​கின்​றன. மேலும், கண்​காணிப்பு கேம​ராவில் மெமரி கார்​டுகளை​யும் திருடிச் செல்​கின்​றனர். இத​னால், கணினி குறித்து விவரமறிந்த நபர்​களே இதில் ஈடு​பட்​டிருப்​பார்​கள் என தெரி​கிறது. உடனடி​யாக திருட்டு கும்​பலை பிடிக்க காவல் துறை நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT