க்ரைம்

சென்னை | தொழிலதிபர் வீட்டில் 53 பவுன் நகை, ரூ.48 லட்சம் திருடிய நண்பர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தொழிலதிபர் வீட்​டில் 53 பவுன் நகை, ரூ.48 லட்​சத்தை திருடிய நண்​பர் கைது செய்​யப்​பட்​டார். சென்னை அண்​ணாநகர் கிழக்கு பகு​தி​யில் வசித்து வருபவர் சதீஷ்கு​மார் (36).

இவருக்கு திரு​மண​மாகி ஒரு மகன் உள்​ளார். ஆனால், கருத்து வேறு​பாடு காரண​மாக மனை​வி​யும், மகனும் பிரிந்து சென்று தனி​யாக வசித்து வரு​கின்​ற​னர்.

சதீஷ்கு​மார் 2 நிறு​வனங்​களை நடத்தி வரு​கி​றார். 3 மாதங்​களுக்கு முன்பு உறவினர் நிகழ்ச்சி ஒன்​றில் சதீஷ்கு​மாருக்கு தருண் (26) என்​பவர் அறி​முக​மா​னார்.

ஐதரா​பாத்​தில் தொழில் செய்து வரு​வ​தாக​வும், வியா​பார விஷய​மாக சென்னை வரும்​போது நட்​சத்​திர ஓட்​டல்​களில் தங்​கிச் செல்​வ​தாக​வும் தருண் கூறி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், கடந்த 17-ம் தேதி சதீஷ்கு​மாரை தொடர்பு கொண்ட தருண், தனது வியா​பாரம் முடிந்து விட்​ட​தாக​வும், 2 நாட்​கள் உங்​களது வீட்​டில் தங்​கிக்​கொள்​ளலாமா என்​றும் கேட்​டுள்​ளார். இதற்கு சதீஷ்கு​மார் சம்​ம​தித்​துள்​ளார்.

இதையடுத்து தருண், சதீஷ்கு​மார் வீட்​டில் தங்​கி​யுள்​ளார். ஆனால், தருணின் நடவடிக்​கை​களில் சதீஷ்கு​மாருக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. இதனால் வீட்​டில் வைத்​திருந்த நகை, பணம் ஆகிய​வற்றை அவர் சரி​பார்த்​துள்​ளார்.

அப்​போது பீரோ​வில் வைத்​திருந்த 53 பவுன் தங்க நகை​கள் மற்​றும் ரூ.48 லட்​சம் பணம் மாய​மாகி இருந்​தது தெரிய​வந்​தது. அதிர்ச்சி அடைந்த சதீஷ்கு​மார் இதுகுறித்து அண்​ணாநகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில் சதீஷ்கு​மாரின் வீட்​டில் சுமார் 10 நாட்​களாக தங்​கி​யிருந்த தருண், அங்​குள்ள பீரோ மற்​றும் லாக்​கர் சாவி​களை போலி​யாகத் தயா​ரித்து தங்க நகை​கள் மற்​றும் பணத்தை திருடியது தெரிய​வந்​தது.

மேலும், திருடிய தங்க நகை​களை விற்று கடன்​களை அடைத்​ததுடன், ஆடம்பர செல​வு​களை​யும் செய்​துள்​ளார். அவரது சொந்த ஊர் சென்னை திரு​வொற்​றியூர், கே.சி.பி காலனி என்​பதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தருணை கைது செய்த போலீ​ஸார் அவரிட​மிருந்து 25 பவுன் நகை​கள் மற்​றும் ரூ.14 லட்​சம் பணத்தை மீட்​டனர்.

SCROLL FOR NEXT