க்ரைம்

காஸ் நிறுவன பெயரில் மோசடி: ரூ.4 லட்சம் இழந்த பெண்கள்

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவின் கல்யாண்-டோம்பிவ்லி காவல் துணை ஆணையர் சுஹாஸ் ஹேமடே நேற்று கூறியதாவது:

டோம்பிவ்லியில் மகாநகர் காஸ் நிறுவனத்தின் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் கூறியதன் அடிப்படையில் 2 பெண்கள் தங்கள் செல்போனில் அந்த நபர் அனுப்பிய இணைப்பை டவுன்லோடு செய்து பல தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

          

அதன்பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டு விட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு துணை ஆணையர் சுஹாஸ் கூறினார்.

SCROLL FOR NEXT