படம்: எம். வீரவேல்

 
க்ரைம்

பண்ருட்டி அருகே டிராக்டர் - மினி லாரி மோதி விபத்து: 4 கூலித் தொழிலாளிகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

எம். வீரவேல்

கடலூர்: பண்ருட்டி அருகே விறகு ஏற்றி வந்த டிராக்டர் மீது மினி லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது டிராக்டரில் முந்திரி விறகு ஏற்றிக்கொண்டு குறிஞ்சிப்பாடி- வெங்கடாம்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் சவுக்கு மற்றும் நாற்று நடும் பணிக்காக கூலித் தொழிலாளர்கள் மினி லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

பணிக்கன் குப்பம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டர் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.

அதில் மினி லாரியில் பயணம் செய்த ராணி, ரவிச்சந்திரன், காந்திமதி, சத்யா ஆகிய நான்கு கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த ஆறு பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT