பைக் சாகசத்தில் ஈடுபட்டவாறு இரும்பு சாலை தடுப்பை இழுத்துச் சென்ற இளைஞர்கள்.

 
க்ரைம்

பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேர் பிடிபட்டனர்: பெற்றோரை வரவழைத்து எச்சரித்த போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: பைக் சாகசத்​தில் ஈடு​பட்ட மாணவர்கள் உட்பட. 5 பேர் போலீ​ஸாரிடம் பிடிபட்​டனர். சென்​னை, பெசன்ட் நகர் பகு​தி​யில் கடந்த 27-ம் தேதி இரவு, பைக்​கு​களில் சென்ற இளைஞர்​கள் சிலர் அதிவேக​மாக வாக​னங்​களை இயக்கி சாகசத்​தில் ஈடு​பட்​டனர். இதனால், அந்த வழி​யாக சென்றவர்கள் அச்​சமடைந்​தனர்.

அது​மட்​டுமின்​றி, சாலை​யில் போக்குவரத்து ஒழுங்குக்​காக போலீஸார் வைத்​திருந்த இரும்பு தடுப்​பு​களை தீப்​பொறி பறக்க பைக்​கு​களில் இழுத்​துச் சென்​றனர். இந்த காட்​சிகள் சமூக வலைத்​தளங்​களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்​படுத்​தின.

இதையடுத்​து, அடை​யாறு போக்​கு​வரத்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். முதல்​கட்​ட​மாக, சாகசத்​தில் ஈடு​பட்ட பைக்​கு​களின் பதிவு எண்​கள், அப்​பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகள் மற்​றும் தொழில்​நுட்ப ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களை போலீ​ஸார் அடை​யாளம் கண்​டனர்.

இதில் தொடர்​புடைய​தாக பல்​லா​வரம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவன், 3 கல்​லூரி மாணவர்​கள் மற்​றும் குன்​றத்​தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் சிவா (19) ஆகிய 5 பேரை நேற்​று ​முன்​தினம் இரவு போலீ​ஸார் பிடித்து காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்று விசா​ரணை நடத்​தினர்.

இதையடுத்​து, அவர்​களது பெற்​றோரை காவல் நிலை​யத்​துக்கு வரவழைத்த போலீ​ஸார், எச்​சரிக்கை விடுத்​ததுடன், மீண்​டும் இது​போன்ற செயல்​களில் ஈடு​படக் கூடாது என்று அறி​வுறுத்தி அனுப்பி வைத்​தனர்.

இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய ஆட்டோ ஓட்​டுநர் சிவா​விடம் தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. பொது​மக்​களின் உயிருக்கு ஆபத்து ஏற்​படுத்​தும் வகை​யில் சாகசத்​தில் ஈடு​படு​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மேலும், 18 வயதுக்கு உட்​பட்ட சிறார்​கள் பைக் ஓட்​டி​னால் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்​லது 3 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை விதிக்​கப்பட வாய்ப்பு உள்​ளது. அதோடு, ஓட்​டிய வாக​னத்​தின் பதிவு சான்​றிதழ் (ஆர்​.சி.) ரத்​து செய்​யப்​படும்​ என போலீ​ஸார்​ எச்​சரித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT