குட்கா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
க்ரைம்

சென்னையில் குட்கா வியாபாரிகள் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: குட்கா வியா​பாரி​கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். குட்கா வியா​பாரி​களை கைது செய்து சிறை​யில் அடைக்க சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார். அதன்​படி, போலீ​ஸார் கண்​காணிப்பு பணியை அதி​கரித்​துள்​ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக, ஆயிரம் விளக்கு போலீ​ஸார் அதே பகுதி, குலாம் அப்​பாஸ் அலி​கான் 7-வது குறுக்​குத் தெரு​வில் உள்ள வீட்​டில் சோதனை நடத்​தினர். அப்போது, அங்கு குட்கா பாக்​கெட்​டு​களை பதுக்கி வைத்து விற்​பனை செய்த முகமது அனஸ் (29) என்​பவரை கைது செய்​தனர்.

அவரிட​மிருந்து 83 கிலோ குட்கா பாக்​கெட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அதே​போல், கோடம்​பாக்​கம் யுனைடெட் இந்​தியா காலனி​யில் ஆட்​டோ​வில் குட்கா கடத்தி விற்​பனை செய்த சைதாப்​பேட்டை வானியர் தெரு​வைச் சேர்ந்த பார​தி​தாசன் (59), அதே பகுதி காரணி தோட்​டத்​தைச் சேர்ந்த மணி (48), அதே பகுதி மேட்​டுப்​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ் (34) ஆகிய 3 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து 25 கிலோ குட்கா பாக்​கெட்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட 4 பேரும் நீதி​மன்ற காவலில் சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT