க்ரைம்

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் வைத்திருந்த 4 பேர் கைது

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ​ராமநாதபுரத்தில் போதைப்​பொருள் வைத்​திருந்த 4 இளைஞர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ராம​நாத​புரம் புத்​தேந்​தல் ரயில்வே கேட் அருகே போலீ​ஸார் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, இருசக்கர வாக​னத்​தில் வந்த 3 இளைஞர்​கள் போலீ​ஸாரை கண்​டதும் தப்​பியோட முயற்​சித்​தனர். அவர்​களை மடக்​கிப் பிடித்து சோதனை​யிட்​ட​தில், அவர்​களிடம் 22 கிராம் போதைப்​பொருள் மறைத்து வைத்​திருந்​தது தெரிந்தது. அவற்றை பறி​முதல் செய்​தனர்.

இது தொடர்​பாக, பரமக்​குடியைச் சேர்ந்த மதன்​ராஜ், மாயாகுளத்தைச் சேர்ந்த சிரஞ்​சீவி, ராம​நாத​புரம் வெற்​றிவேலன் ஆகியோரை கைது செய்​தனர். மேலும், தொடர்​புடைய கீழக்​கரையைச் சேர்ந்த சீனி சாகுல் ஹமீது என்​பவரும் கைது செய்​யப்பட்டார்.

SCROLL FOR NEXT