க்ரைம்

கோவையில் கோயில் காணிக்கை திருடிய பூசாரி உள்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற பெரியகடைவீதி கோனி​யம்​மன் கோயில் உண்​டியல் காணிக்​கைகள் 15-ம் தேதி எண்​ணப்பட்டன. அங்​கிருந்த ஊழியர்​கள் சிலர் யாரும் கவனிக்​காத சமயத்​தில் ஒரு உண்டியலை தனி​யாக எடுத்து வைத்​தனர். பின்​னர், அன்​றைய தினம் இரவு அதிலிருந்த காணிக்​கைகளை ஒரு பையில் எடுத்​துச் சென்​றனர்.

இதை கவனித்த பக்​தர் ஒரு​வர் அளித்த புகாரின்பேரில், மண்டல இணை ஆணை​யர் ரமேஷ் நேற்று முன்​தினம்விசா​ரணை​யில் ஈடு​பட்​டார். இதில், காணிக்கை பணத்தை திருடியது கோட்​டைமேட்​டைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ண​ராஜ், ஊழியர்கள் பீளமேட்​டைச் சேர்ந்த பாலசுப்​பிரமணி​யம், பேரூரைச் சேர்ந்த சரவணன், ரத்​தினபுரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் ஆகியோர் என்​பது தெரிய​வந்​தது. புகாரின்​பேரில், உக்​கடம் போலீ​ஸார் அவர்களை கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT