மோகன்ராஜ்

 
க்ரைம்

புதுக்கோட்டை: பஜ்ரங்தள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி கொலை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: பஜ்ரங்​தள் அமைப்​பின் முன்​னாள் நிர்​வாகி புதுக்​கோட்​டை​யில் நேற்று கொலை செய்யப்பட்டார். புதுக்​கோட்டை திருக்​கோகர்​ணம் குட்​ஷெட் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் மோகன்​ராஜ் (38).

பஜ்ரங் தள் அமைப்​பின் முன்​னாள் கோட்​டப் பொறுப்​பாளர். இந்​நிலை​யில், மோகன்​ராஜ், தாயார் சுசீலா, மனைவி சூர்​ய பிரியா ஆகியோர் நேற்று வீட்​டில் இருந்​தனர். அப்​போது, வீட்​டுக்கு வந்த ஒரு​வர் சுசீலா​விடம் மோகன்​ராஜின் நண்​பர் என்​றும், கோவை​யில் இருந்து வந்​துள்​ள​தாக​வும் கூறி​யுள்​ளார்.

          

பின்​னர், வீட்​டின் வாயி​லில் அந்த நபருடன் மோகன்​ராஜ் சிறிது நேரம் பேசிக்​கொண்டு இருந்​தார். திடீரென தான் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் மோகன்​ராஜின் கழுத்தை அறுத்​துக் கொலை செய்​து​விட்​டு, அந்த நபர் அங்​கிருந்து தப்பி ஓடி​விட்​டார். இதனால் அவரது குடும்​பத்​தினர் மற்​றும் அக்​கம்​பக்​கத்​தினர் அதிர்ச்​சி​யடைந்​தனர்.

தகவலறிந்து வந்த திருக்​கோகர்​ணம் போலீ​ஸார், மோகன்​ராஜின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும், கொலை தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​து, கொலை செய்​தவர் யார், அவருடன் வேறு யாரும் வந்​தார்​களா, கொலைக்​கான காரணம் என்ன என்​பது குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, கொலை​யாளியைக் கண்​டு​பிடித்​து, கைது செய்ய வேண்​டும் என வலி​யுறுத்தி மோகன்​ராஜின் உறவினர்​கள், திருக்​கோகர்​ணம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர். மேலும், அப்​பகு​தி​யில் சாலை மறியலிலும் ஈடு​பட்​டனர். உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று போலீ​ஸார் உறு​தி​ அளித்​ததையடுத்​து, போராட்​டத்​தைக் கைவிட்​டனர்​.

SCROLL FOR NEXT