ஜெக​நாதன்

 
க்ரைம்

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்: அதிமுக முன்னாள் எம்பிக்கு 2 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி அருகே உள்ள ஆண்​டர்​சன்​பேட்டை கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் ஜெக​நாதன்​(77). இவர் 1977-ம் ஆண்டு நடந்த நாடாளு​மன்​றத் தேர்​தலில், ஸ்ரீபெரும்​புதூர்நாடாளு​மன்​றத் தொகு​தி​யில் அதி​முக வேட்​பாள​ராகப் போட்​டி​யிட்டு வென்று எம்​பி​யாக இருந்​தார்.

இவர் தன் முதல் மனைவி லலி​தாவுக்கு தெரி​யாமல், வனிதா என்​பவரை 2-வது திரு​மணம் செய்​த​தாக, முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு திரு​வள்​ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்தனர்.

பூந்​தமல்லி குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர்-2 நீதி​மன்​றத்​தில் நடந்து வந்த இந்த வழக்கு விசா​ரணை, 2021-ம் ஆண்டு திரு​வள்​ளூர் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர்-1 நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்டு விசா​ரணை நடை​பெற்றுவந்​தது.

இதில், ஜெக​நாதன் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது. ஆகவே ஜெக​நாதன், முதல் மனை​விக்​குத் தெரி​யாமல் 2-வது திரு​மணம் செய்த வழக்​கின் தீர்ப்பை நேற்று முன்​தினம் நீதிபதி சுனில் வினோத் அளித்தார். அத்​தீர்ப்​பில் ஜெக​நாதனுக்கு 2 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை​யும், ரூ.10 ஆயிரம் அபரா​த​மும் விதித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT