கோப்புப் படம்

 
க்ரைம்

மெரினா, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அபராதம்

27 வாகனங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் பல்​வேறு முக்​கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடு​பட்ட 27 வாக​னங்​களை போக்​கு​வரத்து போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

சென்​னை​யில் இளைஞர்​கள் அவ்​வப்​போது பைஸ் ரேஸில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அவர்​களை அடை​யாளம் கண்டு போலீ​ஸார் கைது செய்​கின்​றனர். மேலும் வாக​ன​மும் பறி​முதல் செய்​யப்​படு​கிறது.

          

பைக் ரேஸை தடுக்​கும் வகை​யில் போக்​கு​வரத்து போலீ​ஸார் சென்​னை​யின் பிர​தான சாலைகளில் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

அவர்​களின் கண்​காணிப்​பை​யும் மீறி நேற்று முன்​தினம் இரவு ‌‌மெரினா கடற்​கரை சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை, பெரம்​பூர் மேம்​பாலம் உட்பட மேலும் சில சாலைகளில் இளைஞர்​கள் பைக் ரேஸில் ஈடு​பட்​டனர்.

மேலும் பைக்​கு​களில் சாகசத்​தி​லும் ஈடு​பட்​டனர். இதனால் அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அச்​சத்​துக்கு உள்​ளாகினர். இந்த பைக் ரேஸ் வீடியோ காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலானது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன் உத்​தர​விட்​டார். அதன்​படி போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் இது தொடர்​பாக விசா​ரணை மேற்​கொண்​டனர். முதல் கட்​ட​மாக பைக் ரேஸ் மற்​றும் சாகசத்​தில் ஈடு​பட்ட 27 பைக்​கு​களை பறி​முதல் செய்​தனர்.

இந்த வாக​னங்​களை ஓட்டி வந்​தவர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​ததோடு, அபராத​மும் விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் இவர்​களை கைது செய்​வதற்​கான நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT