மனோகர் பிரசாத்

 
க்ரைம்

சென்னை: ரூ.6 கோடி கடன் பெற்று மோசடி - சினிமா பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புரசை​வாக்​கத்​தில் செயல்​பட்டு வரும் தனியார் நிதி நிறு​வனத்​தின் இயக்​குநர் ராகுல்​குமார் என்​பவர், சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸில் புகார் அளித்​தார்.

அந்த புகாரில், நீலாங்​கரையைச் சேர்ந்த சினிமா பிரமுகர் மனோகர் பிரசாத், அவரது மகன் ஆனந்த் பிரசாத் மற்​றும் குடும்​பத்​தினர் தங்​களது சொத்​துகளை அட​மானம் வைத்து நிறு​வனத்​திடம் ரூ.6 கோடி கடன் பெற்​றதாகவும், ஆனால் அந்த சொத்​துகள் ஏற்​கெனவே தனியார் வங்​கி​யில் அட​மானம் வைக்​கப்​பட்​டிருந்​ததையும், சென்னை உயர்​நீதி​மன்​றத்​தில் அந்த சொத்​துக்​களுக்கு எதிராக இணைப்பு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டிருந்​ததையும் மறைத்து கடன் பெற்​றதாகவும் குறிப்​பிட்​டிருந்​தார்.

மேலும், கடன் தொகையை பெற்​றுக்​கொண்ட அவர்​கள், அதனை திருப்பி செலுத்​தாமல் ஏமாற்​றி​விட்​ட​தாகவும், இது​தொடர்​பாக மனோகர் பிரசாத், ஆனந்த் பிரசாத் மற்​றும் குடும்​பத்​தினர் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் புகாரில் தெரி​வித்​திருந்​தார்.

இந்த புகாரின் அடிப்​படை​யில் மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய​வர்​களை கைது செய்ய சென்னை காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டார்.

அதன்​பேரில், மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், மனோகர் பிரசாத்தை (63) நேற்று நீலாங்​கரையில் உள்ள அவரது வீட்​டில் கைது செய்​தனர். இந்த வழக்​கில் தலைமறைவாக உள்​ள மற்றவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT