ராமேசுவரம்: ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபம் மீனவர் குடியிருப்பைச் சேர்ந்தவர் களஞ்சியம் (28). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், மகன் இறந்த துக்கம் தாளாத அவரது தந்தை சேகர் (58), வீட்டில் நேற்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது தொடர்பாக மண்டபம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.