க்ரைம்

ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம்: பொறியாளர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: ​திருப்பூர் கே.செட்​டி​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்​த ஒப்பந்ததார் முரு​கன். மாநக​ராட்சி பகு​தி​களில் செய்த பணி​களுக்கு பில் தொகை விடுவிக்ககோரி 3-வது மண்டல பொறி​யியல் பிரி​வில் இளநிலை பொறி​யாளர் சுப்​பிரமணி​யனிடம் விண்​ணப்​பித்​தார்.

அதற்கு அவர் ரூ.8.40 லட்​சம் லஞ்​ச​ம் கேட்​டுள்​ளார். இதில், முதல் கட்​ட​மாக ரூ.5 லட்​சம் கேட்​டுள்​ளார். இதுபற்றி முரு​கன் திருப்​பூர் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார்​. அவர்கள் தந்த ஆலோசனைப்படி சுப்​பிரமணி​யனிடம் ரூ.5 லட்​சம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவு​மாக பிடித்​து கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT