கோப்புப் படம்
வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவர் குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் பீஜியன். அதே வளாகத்தின் ஒரு பகுதியில் மருத்துவர்களுக்கான குடியிருப்பில் தங்கியுள்ளார். இன்று (ஜன.16) காலை சிஎம்சி மருத்துவமனைக்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் டாக்டர் பீஜியன் குறித்து விசாரித்துள்ளனர்.
பின்னர், அவர் தங்கியுள்ள குடியிருப்புக்கு சிஆர்பிஎப் வீரர்களுடன் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகி்ன்றனர். சோதனை நடைபெறும் குடியிருப்பு வளாகத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையால் குடியிருப்பு வளாக பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.