மீட்கப்பட்ட மரகத சிலை.

 
க்ரைம்

பெருங்கரணை நடுபழனி கோயிலில் திருடப்பட்ட மரகத தண்டாயுதபாணி சிலை மீட்பு

பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: பெருங்​கரணை கிராமத்​தில் கனக மலைக் குன்​றின் மீது உள்ள நடு​பழனி கோயி​லில் திருடப்​பட்ட மரகத தண்​டா​யுத​பாணி சிலை​யை, தனிப்​படைபோலீ​ஸார் அரு​கில் உள்ள கல்​கு​வாரிகுட்​டையி​லிருந்து மீட்டுள்ளனர். திருட்டு தொடர்பாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், அச்சிறுப்​பாக்​கம் அடுத்த பெருங்​கரணை கிராமத்​தில் கனக மலை என்ற சிறியமலை உள்​ளது. இங்​குள்ள கோயிலை முருக பக்​தர்​கள் `நடு​பழனி' என்று அழைக்​கின்​றனர். இக்​கோ​யிலுக்கு நாள்​தோறும் ஏராள​மான பக்​தர்​கள் வரு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், கடந்த 1-ம் தேதி இரவு வழக்​கம்​போல் கோயில் பூசா​ரி​கள் கோயி​லின் நடையை சாத்​தி​விட்​டுச் சென்​றனர். மறு​நாள் பூஜைக்​காக கோயில் நடை திறக்​கப்​பட்​ட​போது கோயி​லின் கரு​வறை​யில் இருந்த விலைம​திப்​பற்ற மரகதக் கல்​லாலான தண்​ட​பாணி சிலையை மர்ம நபர்​கள் திருடிச் சென்​றிருப்​பது தெரிந்​தது.

தகவல் அறிந்த சித்​தாமூர் போலீ​ஸார், வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர். மேலும் எஸ்பி அய்​மன்​ஜ​மால் தலை​மை​யில் 5 தனிப்​படை​யினர் சிலை​யைத் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில் சிசிடிவி கேம​ரா​வின் பதி​வான காட்​சிகள் மற்​றும் போலீ​ஸாருக்கு கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில் பெரம்​பலூர் மற்​றும் அரியலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மணி​கண்​டன்​(26).

ஜெய​பால் (20), இளவழகன் (26) ஆகிய 3 பேரை கைது செய்து தனிப்​படை போலீ​ஸார் விசா​ரித்​தனர். அவர்​கள் கோயி​லிலிருந்து மரகதச் சிலையை திருடியதை ஒப்​புக்​கொண்​ட​னர். மேலும் கோயிலுக்கு அருகே புத்​தூர் பகு​தி​யில் உள்ள கைவிடப்​பட்ட கல்​கு​வாரி குட்​டை​யில் சிலையை மறைத்து வைத்​திருப்​பது தெரிந்​தது.

இதையடுத்து சித்​தாமூர் காவல் ஆய்​வாளர் மகாலிங்​கம் தலை​மையி​லான போலீ​ஸார் குட்​டை​யில் இருந்த மரகதச் சிலையை மீட்​டனர். அந்த சிலை செய்​யூர் வட்​டாட்​சி​யர் முன்​னிலை​யில் அரசு கரு​வூலத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டது.

மரகதச் சிலை மீண்​டும் கிடைத்​த​தால் கிராம மக்​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். மேலும் சிலையை மீட்டு குற்றவாளிகளை சிறையில் அடைத்த தனிப்​படை போலீ​ஸாருக்கு காவல் துறை தலைமை இயக்​குநர் மகேஷ்கு​மார் அகர்​வால்​ பா​ராட்​டு​களைத்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT