கோப்புப் படம்

 
க்ரைம்

இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியில் மின்சாரம் கசிந்து மூதாட்டி உயிரிழப்பு

திருத்தணி நகராட்சியை கண்டித்து மறியல்

செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்​தணி நேரு நகர் பகுதி​யைச் சேர்ந்​தவர் சண்​முகம்(55). இவர் நேற்று முன்​தினம் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். பின்​னர் திருத்​தணி நக​ராட்சி நிர்​வாகத்​துக்​குச் சொந்​த​மான இல​வச குளிர்​சாதனப் பெட்​டி​யில் அவரது உடல் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. நேற்று மாலை உறவினர்​கள், நண்​பர்​கள், சண்​முகத்​தின் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி கொண்​டிருந்​தனர்.

அப்​போது எதிர்​பாராத​வித​மாக குளிர்​சாதனப் பெட்​டி​யி​லிருந்து மின்​சா​ரம் கசிந்து அரு​கி​லிருந்த பெண்​கள் மீது மின்​சா​ரம் பாய்ந்​ததில், திருத்​தணி அடுத்த காசிநாத​புரத்​தைச் சேர்ந்த தேவகி(65) சம்​பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். மேலும் தேவகியம்மா(65), செல்வி(60), சாமுண்​டீஸ்வரி(60), பஞ்​சாமிர்​தம்(55), தனலட்​சுமி(45) உள்​ளிட்ட 10 பெண்​கள் மின்​சா​ரம் பாய்ந்​ததில் காயமடைந்​தனர். அவர்​கள் உடனடி​யாக மீட்​கப்​பட்டு, திருத்​தணி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

குளிர்​சாதனப் பெட்​டியை முறை​யாக பராமரிக்​காமல் பெண்​ணின் இறப்​புக்​குக் காரண​மான திருத்​தணி நக​ராட்​சி​யைக் கண்​டித்து திருத்​தணி - நேரு நகர் 150-க்​கும் மேற்​பட்​டோர் திருத்​தணி, சித்​தூர் மாநில நெடுஞ்​சாலை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தகவலறிந்த திருத்​தணி ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் மற்​றும் போலீ​ஸார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடு​பட்​ட​வர்​களை சமாதானப்​படுத்​தினர். இதையடுத்து அனைவரும் அங்​கிருந்து கலைந்து சென்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT