பெரம்​பூர் ரயில் நிலை​யத்​தில் சிக்​கிய ரூ.5 கோடி மதிப்​பிலான போதைப் பொருள்​.

 
க்ரைம்

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பு போதைப் பொருள் சிக்கியது

செய்திப்பிரிவு

சென்னை: பெரம்பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.5 கோடி மதிப்​பிலான போதைப் பொருட்​கள் சிக்​கின. இதுகுறித்​து, ஆர்​பிஎஃப் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, பறக்​கும் படை​யினர், ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் இணைந்​து, ரயில் நிலை​யங்​களில் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

          

அந்த வகை​யில், சென்னை பெரம்​பூர் ரயில் நிலை​யத்​தில் மூர்​மார்க்​கெட் காம்ப்​ளக்ஸ் ஆர்​பிஎஃப் காவல் ஆய்​வாளர் அருண்​கு​மார் தலை​மை​யில், உதவி ஆய்​வாளர்​கள் சி.கோ​பால​கிருஷ்ணன் மற்​றும் எம்​.​ராஜேஷ் ஆகியோர் கொண்ட ஆர்​பிஎஃப் போலீ​ஸார் நேற்று கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அசாம் மாநிலம் நியூ தின்​சுகி​யா​வில் இருந்து பெரம்​பூர் வழி​யாக பெங்​களூரு நோக்​கிச் செல்​லும் விரைவு ரயில் வந்​தது. அந்த ரயி​லின் பொதுப் பெட்​டி​யில் ஆர்​பி எஃப் போலீ​ஸார் சோதனை மேற்​கொண்​டனர்.

அந்த ரயில் பெட்​டி​யில் கேட்​பாரற்று ஒரு சூட்​கேஸ் நெடு நேர​மாக இருந்​தது. அதை உரிமை கோரிப் பெற யாரும் முன்​வர​வில்​லை. தொடர்ந்து அந்த சூட்​கேசை திறந்து பார்த்​த​போது, அதில் 4 பாக்​கெட்​களில் பவுடர்​கள் இருந்​தன.

அதை சோதித்​த​போது, ஹைட்​ரோ​போனிக் போதைப் பொருள் என்​பது தெரிய​வந்​தது. 5 கிலோ எடை கொண்ட இவற்​றின் மதிப்பு ரூ.5 கோடி.

இதையடுத்து இந்த போதைப்​ பொருட்​கள் மேல் அதி​காரி​களின் விசா​ரணைக்​காக போதைப்​பொருள் நுண்​ணறி​வுப் பிரி​வினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

போதைப் பொருட்​களை ரயி​லில் கடத்​திய நபர் யார், போலீஸரை கண்​டதும் போதைப்​பொருளை வைத்​து​விட்டு தப்​பி​ விட்​டாரா என்ற கோணத்​தில் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT