கோவை: கோவை விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான கடத்தல் ட்ரோன்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணிகள் சிலரிடம் இருந்து ரூ.1.15 கோடி மதிப்பிலான உயர்ரக கடத்தல் ட்ரோன்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவற்றை கடத்தி வந்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் சுங்கவரித்துறை அலுவலகம் சார்பில் ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டுள்ளது.