க்ரைம்

13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது: அமமுக, பாஜக கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: 13 வயது சிறுமி​யிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக திமுக பிர​முகர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை மேற்கு மண்டல காவல் எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யைச் சேர்ந்த, 13-வயது சிறுமி​யின் தாய் ஒரு​வர் திரு​மங்​கலம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் புகார் ஒன்றை அளித்​தார்.

அதில், “எனது மகளிடம், உறவின​ரான கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த பரத் (30) என்​பவர் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டுள்​ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார்.

          

இதையடுத்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். முதல் கட்​ட​மாக குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான பரத்தை காவல் நிலை​யம் அழைத்து விசா​ரித்​தனர்.

இதில் அவர் திமுக​வில் நிர்​வாகி​யாக இருப்​பதும், அவர் உறவினர் மகளான சிறுமி​யிடம் தொடர்ந்து பல ஆண்​டு​களாக பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டதும் தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ பிரி​வின் கீழ் வழக்​குப் பதிந்து பரத்தை கைது செய்​தனர்.

கட்​சிகள் கண்​டனம்

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ஆட்சி அதி​காரம் கையி​லிருக்​கும் மமதை​யில் தான்​தோன்​றித்​தன​மாகத் திரி​யும் தமது சொந்​தக் கட்​சிக்​காரர்​களிடம் இருந்து பெண்​களைப் பாது​காக்க முடி​யாத முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்ற குற்​ற​வாளி​களைக் கட்​டுப்​படுத்தி தமிழகத்​தின் சட்​டம்​-ஒழுங்கை எப்​படி சீராக்​கு​வார். திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் பெண்​கள் நிம்​ம​தி​யாக வெளியே தலை​காட்ட முடி​யு​மா?

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: பாலியல் வழக்​கில் திமுக நிர்​வாகி ஒரு​வர் போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மகளிர் பாது​காப்​பிலும், பெண்​கள் அதி​களவு வேலைக்​குச் செல்​வ​தி​லும் இந்​தி​யா​விலேயே முதன்மை மாநில​மான தமிழகம், கடந்த 5 ஆண்​டு​களில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் வன்​கொடுமைச் சம்​பவங்​கள் அதி​கள​வில் அரங்​கேறும் மாநிலங்​களில் ஒன்​றாக மாறி​யிருக்​கிறது.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: தமிழகத்​தில் கடந்த 5 ஆண்​டு​களில், பாலியல் குற்​றங்​களில் ஈடு​படு​பவர்​கள், குறிப்​பாக, சிறு குழந்​தைகள் மீது பாலியல் குற்​றங்​களைச் செய்​பவர்​கள், பெரும்​பாலும் திமுகவைச் சேர்ந்​தவர்​களாகவே இருப்​பது, தி​முக அரசு, தங்​கள் மீது நடவடிக்கை எடுக்​காது என்ற ஒரே தைரி​யத்​தில்​தான்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT