பெரிய​நாயகம்

 
க்ரைம்

கிருஷ்ணகிரியில் பாலியல் கொடுமையால் பெண் குழந்தை உயிரிழப்பு - திமுக நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: அஞ்​செட்டி அருகே பாலியல் தொந்​தர​வால் பெண் குழந்தை உயி​ரிழந்த சம்​பவத்​தில், திமுக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார். கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி பகு​தி​யைச் சேர்ந்த 24 வயது பெண், கணவரைப் பிரிந்து, தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார்.

இவர், தனது இரண்​டரை வயது பெண் குழந்தைக்கு, கடந்த டிசம்​பர் மாதம் 11-ம் தேதி வலிப்பு வந்​த​தாகக் கூறி, தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் பரிசோதனை செய்​த​தில், குழந்தை ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர்.

குழந்தை​ உயிரிழப்பில் சந்​தேகம் இருப்​ப​தாக அப்​பெண்​ணின் கணவர் அஞ்​செட்டி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் குழந்தை சடலத்​தைக் கைப்​பற்​றி, உடற்​கூறு ஆய்​வுக்​காக கிருஷ்ணகிரி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

          

உடற்​கூறு ஆய்​வறிக்​கை​யில், பாலியல் கொடுமை​யால் குழந்தை உயி​ரிழந்​தது தொிய​வந்​தது. இதையடுத்​து, குழந்தையை பாலியல் கொடுமை செய்​த​தாக ஜேசு​ராஜபுரம் கோம்​பைக்​காடு பகு​தி​யைச் சேர்ந்த பெரிய​நாயகம்​(40) என்​பவரைப் போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர் திமுக இளைஞரணி கிளைச் செய​லா​ள​ராகப் பொறுப்பு வகிக்​கிறார். அவருக்​கும், இறந்த குழந்தையின் தாய்க்​கும் தவறான பழக்​கம் இருந்​துள்​ளது. அந்​தப் பெண் வீட்​டில் இல்​லாத நேரத்​தில் பெரிய​நாயகம் குழந்தையை பாலியல் கொடுமை செய்​த​தில், உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு குழந்தை உயி​ரிழந்​துள்​ளது.

போக்சோ பிரி​வில் பெரிய​நாயகம் மீது வழக்​குப் பதிவுசெய்​து, கைது செய்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “பச்​சிளம் குழந்தையை பாலியல் கொடுமை செய்​து, கொலை செய்​துள்ள தகவல் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

திமுக ஆட்சி ஒழிந்​தால் மட்​டுமே, தமிழகத்​தில் அனை​வரும் பாது​காப்​பாக இருக்க முடி​யும்” என்று தெரி​வித்​துள்​ளார். இதே​போல, பல்​வேறு கட்சித் தலை​வர்​களும் இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT