கோப்புப் படம்

 
க்ரைம்

பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு: நாயை ஏவி முதியவரை கடிக்க வைத்த இளைஞர்

செய்திப்பிரிவு

சென்னை: திருவல்லிக்கேணி நடுக்குப்பம், 3-வது தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன் (59). இவர் நடுக்குப்பம் 6-வது தெருவில் உள்ள குடிநீர் குழாயில் (அடிப்பம்பு) தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அதே தெருவில் வசித்து வந்த எழில் (38) என்பவர், தமிழ் வாணனிடம் இங்கு தண்ணீர் பிடிக்கக் கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டார்.

கோபம், அடைந்த முதியவர், ‘இது குடிநீர் வாரிய பொதுக் குழாய். இங்கு ஏன் தண்ணீர் பிடிக்கக் கூடாது? என கூறி பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த எழில், தனது வளர்ப்பு நாயை ஏவி தமிழ்வாணனை கடிக்க வைத்துள்ளார்.

காலில் காயம் அடைந்த தமிழ்வாணன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் எழிலை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT