தஞ்சாவூர்: தஞ்சாவூர் தவெக எம்எல்ஏ விஜய்சரவணன் கையில் மதுபாட்டிலுடன் நடனமாடும் வீடியோ விவகாரம் தொடர்பாக, எக்ஸ் தளத்துக்கு விவரம் கேட்டு சைபர் க்ரைம் கடிதம் அனுப்பியுள்ளது.
இது பழைய வீடியோ. அவதூறு பரப்பப்படுவதாக எம்எல்ஏ தெரிவித்திருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் தஞ்சாவூர் சைபர் க்ரைம் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், எக்ஸ் தளத்துக்கு இந்த விவகாரம் தொடர்பாக விவரம் தருமாறு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.