தளபதி பாஸ்​கர்

 
க்ரைம்

சிட் பண்ட் நடத்தி பண மோசடி: காங்கிரஸ் நிர்வாகி கைது

செய்திப்பிரிவு

சென்னை: சிட் பண்ட் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர். வளசர​வாக்​கம் அருகே காரம்​பாக்​கம், பொன்​னி ​நகர், விவே​கானந்​தர் தெரு​வில் வசிப்​பர் தளபதி பாஸ்​கர் (52).

காங்​கிரஸ் கட்​சி​யின்​ ​மாநில பொதுச்​ செயல​ராக உள்ளார். இவர் போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறு​வனம் நடத்தி வந்தார். இந்நிறு​வனத்தை நடத்​தி​ய​தில் பாஸ்​கருக்கு கடுமை​யான நஷ்டம் ஏற்பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

தளபதி பாஸ்கரின் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து, ஏமாந்தவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தனர். அதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென தலைமறைவான தளபதி பாஸ்கர், கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரிந்து நேற்று முன்தினம் இரவு அங்கு திரண்ட பணம் முதலீடு செய்தவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள், தளபதி பாஸ்கரை அறைக்குள் அடைத்து வைத்து பணத்தை திருப்பிக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து கோயம்பேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து தளபதி பாஸ்கரை மீட்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT