டிக்கெட் இல்லாதது தொடர்பாக, மோதலில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர், பெண் டிக்கெட் பரிசோதகர்.

 
க்ரைம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாதது தொடர்பாக பெண் வழக்கறிஞர், டிக்கெட் பரிசோதகர் மோதல்

இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாதது தொடர்பாக பெண் வழக்கறிஞர், டிக்கெட் பரிசோதகர் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக, இருவர் மீதும் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்​னை, மாங்​காட்​டைச் சேர்ந்த மோகனா உயர்​நீ​தி​மன்ற வழக்​கறிஞர். இவர் நேற்​று​முன்​தினம், கடற்​கரை நோக்கி செல்​லும் மின்​சார ரயி​லில் பயணித்​த​தாக​வும், எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் இறங்​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது.

இவரிடம் ரயில்வே பெண் டிக்​கெட் பரிசோதகர் ஷல்மா பேகம் டிக்​கெட் கேட்​டுள்​ளார். அதற்கு உறவினரை வழியனுப்ப வந்​த​தாக மோகனா தெரி​வித்​ததுள்​ளார். இதையடுத்​து, நடைமேடை டிக்​கெட் காண்​பிக்​கும்​படி ஷல்மா பேகம் கேட்க, மோகனாவிடம் டிக்​கெட் இல்​லாத​தால், இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

வாக்​கு​வாதம் முற்​றியதையடுத்​து, டிக்​கெட் பரிசோதகர்​களின் அறைக்கு வழக்​கறிஞர் மோக​னாவை அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

அப்​போது, இரு​வருக்​கும் இடையே மீண்​டும் வாக்​கு​வாதம் ஏற்​பட்டு, டிக்​கெட் பரிசோதகரின் கன்​னத்​தில் மோகனா அறைந்​தார். பதி​லுக்கு டிக்​கெட் பரிசோதகரும் மோக​னாவை தாக்​கி​னார்.

இரு​வரும் ஒரு​வரை ஒரு​வர் தாக்கி கொண்​டனர். இந்த மோதல் சம்​பவம் தொடர்​பாக, ரயில்வே போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வழக்கறிஞரும், பெண் டிக்​கெட் பரிசோதகரும் மோதிக்​கொண்ட காட்சி சமூக ஊடகங்​களில் வைரலானது.

SCROLL FOR NEXT