க்ரைம்

நள்ளிரவில் பெண்களுக்கு வாட்ஸ்-ஆப் மெசேஜ், ரீல்ஸ்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது காவல் ஆணையரிடம் புகார்

செய்திப்பிரிவு

சோழிங்​கநல்​லூர்: கிழக்கு கடற்​கரைச் சாலை முட்​டுக்​காடு பகு​தி​யில் உள்ள குடி​யிருப்பு வளாகத்​தில் மகேந்​திரா ராவ், அவரது மனைவி சங்​கீதா ராவ் மற்​றும் 2 மகன்​களு​டன் வசித்து வரு​கிறார்.

சுமார் 3 வாரங்​களுக்கு முன்பு ஓய்​வு​ பெற்ற ஐஏஎஸ் அதி​காரி சிவசண்​முக​ராஜ் என்​பவரும் அங்கு குடியேறி​னார். குடி​யிருப்​பில் அனை​வருக்​கும் பொது​வான பாதையை அடைத்து சிவசண்​முக​ராஜ் வேலி அமைக்க முயன்​ற​தாக​வும், இதற்கு சங்​கீதா ராவ் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​ட​தாக​வும் கூறப்​படுகிறது.

அப்​போது டெல்​லி​யில் இருந்த தனது கணவர் மகேந்​திரா ராவிடம் சங்​கீதா ராவ் இதுகுறித்து தெரி​வித்​த​தாக​வும், அவர் தொலைபேசி மூலம் பேசி பிரச்​சினையைத் தீர்க்க முயன்​ற​போது, சிவசண்​முக​ராஜ் அவரை மிரட்​டிய​தாக​வும் கூறப்​படு​கிறது.

பின்​னர் சங்​கீதா ராவ், அவரது வருங்​கால மரு​மகளின் செல்​போன் எண்​களை அவர்​களின் அனு​ம​தி​யின்றி பெற்ற சிவசண்​முக​ராஜ், நள்​ளிரவு நேரங்​களில் வாட்​ஸ்​-ஆப் மூலம் மெசேஜ்கள் மற்​றும் ரீல்​ஸ்​களை அனுப்​பிய​தாக தெரி​கிறது.

இது தொடர்​பாக கானத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​பிறகும் சிவசண்​முக​ராஜ் தொடர்ந்து அச்​சுறுத்​தல் விடுத்​த​தாக​ அவர்​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.

இதையடுத்து மகேந்​திரா ராவ் குடும்​பத்​தினர் நேற்று தாம்​பரம் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்​குச் சென்று காவல் ஆணை​யர் பிரேம் ஆனந்த் சின்​ஹாவை சந்​தித்து புகார் மனு அளித்​தனர். அந்த புகாரின் மீது உரிய வி​சா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அவர்​கள்​ கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT