சென்னை: சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், ஒரு வரிடம் ரூ.5.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு மற்றொருவர் மீது போலியாக போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் மீது போலியாக போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், இதற்காக ரூ.5.50 லட்சம் லஞ்சமாகப் பெறப்பட்டதும் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சட்ட விதிகளை மீறி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் வசந்த் ராஜா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதன்பேரில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.