ரஞ்சன் குமார்

 
க்ரைம்

சின்னத்திரை நடிகர் மனைவியிடம் நகை விற்று தருவதாக ரூ.10 லட்சம் மோசடி? - காங்கிரஸ் பிரமுகர் மீது புகார்

செய்திப்பிரிவு

சென்னை: சின்னத்திரை நடிகர் குரேஷியின் மனைவியிடம் தங்க நகைகளை விற்று தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் முகமது குரேஷி. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

இவரது மனைவி, கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி அவசர தேவைக்காக தன்னிடம் இருந்த 92.73 கிராம் தங்க நகைகளை விற்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நண்பர்கள் வாட்ஸ்-அப் குழுவில் பதிவிட்டபோது, நண்பர் ஒருவர் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரை அறிமுகப்படுத்தினாராம்.

இதையடுத்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை அவரிடம் குரேஷி மனைவி கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், நகைகளை விற்றதாக கூறி ரூ.4 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.10 லட்சத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குரேஷி மனைவி அளித்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் விசாரிக்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT