அபிமன்யு

 
க்ரைம்

சிறுமிக்கு செல்போன் வாங்கித் தந்த கல்லூரி மாணவர் படுகொலை

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: காதலித்த சிறுமிக்கு செல்​போன் வாங்​கிக் கொடுத்த கல்​லூரி மாணவரை அடித்​துக் கொலை செய்த சிறுமி​யின் பெற்​றோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பெரம்​பலூர் மாவட்​டம் வேப்​பந்​தட்டை அருகே உள்ள வெண்​பாவூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் சரவணகுமார் மகன் அபிமன்யு (21). பெரம்​பலூரில் உள்ள தனியார் கல்​லூரி​யில் எம்​சிஏ 2-ம் ஆண்டு படித்து வந்​தார். இவர், 7-ம் வகுப்பு படிக்​கும் 12 வயது சிறுமியை காதலித்து வந்​த​தாகவும், அண்​மையில் அந்த மாணவிக்கு செல்​போன் வாங்​கித் தந்​த​தாகவும் கூறப்​படு​கிறது.

இதையறிந்த அந்த மாணவி​யின் தாய், தந்தை இரு​வரும் நேற்று முன்​தினம் இரவு அபிமன்யு வீட்​டுக்​குச் சென்று அவரை கண்​டித்​துள்​ளனர். அப்​போது, அவர்​களுக்கு இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டதில், இரும்பு ராடு மற்றும் கத்தியால் அபிமன்யுவை சிறுமியின் தந்தை தாக்கியுள்ளார். இதில், அபிமன்யு அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கை.களத்தூர் போலீஸார் சென்று அபிமன்யு உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் தாய், தந்தையை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT