தினேஷ் ராஜ்

 
க்ரைம்

இணை தயாரிப்பாளரை அடுத்து போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​போதைப் பொருள் வழக்​கில் இணை தயாரிப்​பாளர் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவர் கொடுத்த தகவலின்​பேரில் சினிமா தயாரிப்பாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். போதைப் பொருட்​கள் விற்​பனை, கடத்​தல் மற்​றும் பதுக்​கலுக்கு எதி​ரான நடவடிக்​கையை சென்னை போலீ​ஸார் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக திரு​மங்​கலம் போலீ​ஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார் கடந்த 19-ம் தேதி திரு​மங்​கலம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கண்​காணித்​தனர்.

குறிப்​பாக திரு​மங்​கலத்​தில் உள்ள பார்க் ரோடு பகு​தி​யில் கண்​காணித்​த​போது அங்கு சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்​றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரன் (26) என்​பவரைப் பிடித்து விசா​ரித்​தனர். அவரிடம் எல்​எஸ்டி எனும் ஸ்டாம்பு வடிவி​லான போதைப் பொருட்​கள் இருந்​தது.

இதனையடுத்து அந்த போதை ஸ்டாம்ப்​களை​யும் 2 செல்​போன்​களை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் தேனாம்​பேட்​டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்​பாளர் முகமது மஸ்​தான் சர்​புதீன் (44), முகப்​பேரைச் சேர்ந்த சீனி​வாசன் (25), வளசர​வாக்​கத்​தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேரைக் கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து ரூ.27.91 லட்​சம், ஓஜி எனப்​படும் உயர் ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டன. சர்​புதீன் சினிமா பிரபலங்​கள், மாடலிங் உட்பட பல்​வேறு துறை​களைச் சேர்ந்​தவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக போதைப் பொருட்​களை வைத்​திருந்​தா​ரா? இவரது பின்​னணி​யில் வேறு யாரேனும் உள்​ளன​ரா? என போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

அவரை காவலில் எடுத்து விசா​ரித்​த​தில் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் சினிமா தயாரிப்​பாள​ரும், விநி​யோகஸ்​தரு​மான நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த தினேஷ் ராஜ் (39) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

நடிகர் தனுஷின் அக்கா மகன் பவீஷ் நடிப்​பில் ‘லவ் ஓ லவ்’ எனும் படம் தயா​ராகிறது. இதன் தயாரிப்​பாளர்​களில் ஒரு​வ​ராக தினேஷ் ராஜ் உள்​ளார் எனக் கூறப்​படு​கிறது.

இவரும், ஏற்​கெனவே கைதான இணை தயாரிப்​பாளர் சர்​புதீனும் சேர்ந்து போதைப் பொருள் உட்​கொண்​ட​தாக கூறப்​படு​கிறது.

மேலும் இவர்​கள் வேறு ஏதேனும் பார்ட்​டிகளுக்கோ சினிமா பிர​முகர்​களுக்கோ போதைப் பொருள் விற்​பனை செய்​தார்​களா? எனவும் தொடர்ந்து விசா​ரிக்​கப்​பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT