க்ரைம்

சென்னை: வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த போலி வைர வியாபாரிகளுக்கு 6 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

சென்னை: மோசடி ஆவணங்​கள் மூலம் வங்​கி​களில் கடன் வாங்கி கோடிக்​கணக்​கில் மோசடி செய்த போலி வைர வியா​பாரி​கள் 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்​டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள ஆந்​திரா வங்​கிக் கிளை​யில் கடந்த 1999-2000-ம் ஆண்​டில் ஆவணங்​களை சரி​பார்க்​காமலும், முறை​யாக ஆய்வு நடத்​தாமலும் குறிப்​பிட்ட ஒரு நிறு​வனத்​துக்கு கோடிக்​கணக்​கில் கடன் வழங்கப்​பட்​டுள்​ள​தாக வந்த புகாரின் ​பேரில் சிபிஐ அதி​காரிகள் வழக்​குப் ​ப​திவுசெய்து விசா​ரணை நடத்​தினர்.

சிபிஐ விசா​ரணை​யில் தேனாம்​பேட்டை எல்​டாம்ஸ் சாலை​யில் உள்ள டி.என்​.இன்​டர்​நேஷனல் என்ற நிறு​வனம் வைர வியா​பாரத்​தில் ஈடு​படு​வ​தாகக் கூறி போலி​யான ஆவணங்களை​யும், மும்​பை​யில் ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள 2 சிறிய அறை​களை ரூ.1.40 கோடி மதிப்​புடையது எனக்​கூறி​யும் சென்னை ஆந்​திரா வங்​கி​யில் ரூ.5.75 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்​திருப்​பது தெரிய​வந்​தது.

அதையடுத்து ஆந்​திரா வங்​கி​யின் கிளை முதன்மை மேலா​ளர் பங்​கஜா, மூத்த மேலா​ளர் எஸ்​.​வி.எஸ்​.மூர்த்​தி, ஹைத​ரா​பாத் பஞ்​சாரா ஹில்ஸ் கிளை மூத்த மேலா​ளர் அர்ச்​சனா ஷா, டி.என். இன்​டர்​நேஷனல் நிறுவன இயக்​குநர்​கள் கேத்​தன் ஏ ஷா, முகேஷ் ஏ ஷா, அஸ்​வின் ஏ ஷா, அந்​நிறு​வனத்​தின் தலைவர் ரஷ்மி​காந்த் ஹிராலால் ஷா, மதிப்​பீட்​டாளர் விலாஸ் ஜெகந்​நாத் பர்தா புர்​கர், வினய் டி ஷா, ஹாங்​காங்​கில் உள்ள அராகி நிறுவன இயக்​குநர் சஞ்​சீவ் சந்​திர​காந்த் ஷா உள்​ளிட்​டோர் மீது சிபிஐ அதி​காரி​கள் கடந்த 2002-ம் ஆண்டு மோசடி, கூட்​டுச் சதி உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

ரூ.47 கோடி மோசடி: இந்த வழக்கு விசா​ரணை சென்னை 11-வது கூடு​தல் சிபிஐ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி டி.பி.வடிவேலு முன்​பாக நடந்​தது. அப்​போது சிபிஐ தரப்​பில் சிறப்பு குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜி.அர்​ஜுனன் ஆஜராகி வாதிட்​டார். வழக்கை விசா​ரித்த நீதிப​தி, “குற்​றம் சாட்​டப்​ பட்​டுள்ள மூர்த்​தி, விலாஸ் ஜெகந்​நாத், சஞ்​சீவ் சந்​திர​காந்த் ஷா ஆகியோர் உயி​ரிழந்​த​தால் அவர்​கள் மீதான வழக்கு கைவிடப்​பட்​டது. இந்த வழக்​கில் டி.என்.இன்​டர்​நேஷனல் நிறுவன இயக்​குநர்​களான கேத்​தன், முகேஷ், அஸ்​வின் மற்​றும் ரஷ்மி​காந்த் என அனை​வரும் கூட்டு சேர்ந்து வைர வியா​பாரத்​தில் ஈடு​படு​வ​தாக​வும், கிரானைட் தொழிலில் ஈடு​படு​வ​தாக​வும் கூறி போலி​யான ஆவணங்​களைத் தயாரித்து இதற்கு முன்​பாக பல்​வேறு வங்​கி​களில் ரூ.47 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்​துள்​ளனர்.

ஆனால் இவர்​களின் குற்ற பின்​புலம் குறித்து ஆரா​யாமல், கடனுக்​காக வழங்​கப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் அடமான சொத்​துகளின் உண்​மைத்​தன்​மையை ஆய்வு செய்​யாமல் ஆந்​திரா வங்​கிக் கிளை அதி​காரி​களும் ரூ.5.75 கோடி வரை கடன் வழங்​கி​யுள்​ள​தாக சிபிஐ குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த வழக்​கில் வங்கி அதி​காரி​கள் பங்​கஜா, அர்ச்​சனா ஷா மற்​றும் வினய் ஷா ஆகியோர் மீதான குற்​றச்​சாட்டு சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட​வில்லை என்​ப​தால் அவர்​களை விடு​தலை செய்​கிறேன்.

ரூ.20 லட்​சம் அபராதம்: அதே​நேரம், வங்​கி​களில் மோசடி​யாக கடன் பெற்று ஏமாற்​று​வதையே தொழிலாகக் கொண்​டுள்ள கேத்​தன் ஷா, முகேஷ் ஷா, அஸ்​வின் ஷா, ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா ஆகிய 4 பேருக்கு தலா 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை மற்​றும் ரூ.20 லட்​சம் அபராதம் விதிக்​கிறேன். இந்த ரூ.20 லட்​சத்தை அவர்​கள் ஆந்​திரா வங்​கிக்கு இழப்​பீ​டாகச் செலுத்த வேண்​டும். தவறி​னால் மேலும் 2 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை அனுபவிக்​க வேண்​டும்​” எனத்​ தீர்ப்​பளித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT