க்ரைம்

விரைவாக பாஸ்போர்ட் சேவைகளை பெற்றுத் தருவதாக பணம் பறிக்கும் கும்பல்: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பாஸ்போர்ட் சேவை​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி பொது​மக்​களிடம் பணம் பறிக்​கும் மோசடிகள் அதி​கரித்து வரு​வ​தால், மக்​கள் மிகுந்த விழிப்​புணர்​வுடன் இருக்க வேண்​டும் என மத்​திய புல​னாய்​வுத் துறை (சிபிஐ) எச்​சரித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, சிபிஐ தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள அறி​வுறுத்​தலில் கூறி​யிருப்​ப​தாவது: பாஸ்​போர்ட்டை விரை​வாகப் பெற்​றுத் தரு​வ​தாக​வும், உடனடி​யாக நேர்​காணலுக்கு ஏற்​பாடு செய்​வ​தாக​வும் கூறி, பொது​மக்​களிடம் சில கும்​பல் பணமோசடி​யில் ஈடு​படு​வ​தாக புகார்​கள் வந்​துள்​ளன.

குறிப்​பாக, அரசு இணை​யதளங்​களைப் போலவே தோற்​றமளிக்​கும் போலி இணை​யதளங்​கள் மூலம் விண்​ணப்​பக் கட்​ட​ணம், வங்​கிக் கணக்கு விவரங்​கள் மற்​றும் பொது​மக்​களின் தனிப்​பட்ட தகவல்​களும் அந்த கும்​பலால் திருடப்​படு​கின்​றன.

மேலும், காவல்​துறை அதி​காரி​கள் போலத் தொலைபேசி​யில் தொடர்​பு​கொள்​ளும் மோசடிக்​காரர்​கள், பாஸ்​போர்ட் ரத்து செய்​யப்​படும் என மிரட்டி அபராதம் செலுத்​து​மாறு கூறி பொது​மக்​களிடம் பணம் பறிக்​கின்​றனர்.

பாஸ்​போர்ட் புதுப்​பித்​தல் மற்​றும் விநி​யோக சேவை​கள் தொடர்​பாகப் போலி ஆவணங்​களைக் காட்​டி​யும் மோசடி​யில் ஈடு​படு​கின்​றனர்.

எனவே, பாஸ்​போர்ட் தொடர்​பான சேவை​களைப் பெறு​வதற்கு www.passportindia.gov.in என்ற அதி​காரப்​பூர்வ இணை​யதளத்தை மட்​டுமே பொது​மக்​கள் பயன்​படுத்த வேண்​டும்.

அனைத்​துக் கட்​ட​ணங்​களை​யும் அதி​காரப்​பூர்வ தளத்​தின் மூல​மாகவே செலுத்த வேண்​டும். வங்​கிக் கணக்கு விவரங்​கள், கடவுச்​சொற்​கள் உள்​ளிட்ட ரகசி​யத் தகவல்​களைப் பிறருடன் பகிரக் கூடாது.

முகவர்​கள் மற்​றும் சேவை வழங்​குநர்​களின் அடை​யாளத்தை முழு​மை​யாகச் சரி​பார்த்த பின்​னரே அவர்​களு​டன் தொடர்​பு​கொள்ள வேண்​டும். விரை​வாகப் பாஸ்​போர்ட் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி கூடு​தல் பணம் கேட்​பவர்​களை நம்​பக் கூடாது.

பாஸ்​போர்ட் ரத்து செய்​யப்​படும் என மிரட்​டும் அழைப்​பு​கள் வந்​தால், அச்​சமடைந்து பணம் செலுத்​தவோ, தனிப்​பட்ட தகவல்​களை வழங்​கவோ கூடாது.

பாஸ்​போர்ட் தொடர்​பான மோசடி​யில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், www.cybercrime.gov.in என்ற இணை​யதளத்​தின் மூல​மாகவோ அல்​லது 1930 என்ற உதவி எண்​ணைத் தொடர்​பு​கொண்டோ புகார் அளிக்​கலாம்.

எனவே, விரை​வான சேவை என்ற பெயரில் அளிக்​கப்​படும் போலி வாக்​குறு​தி​களை​யும், மிரட்​டல் அழைப்​பு​களை​யும் நம்பி ஏமாறாமல், அரசு வழங்​கும் அதி​காரப்​பூர்வ சேவை​களை மட்​டுமே பயன்​படுத்தி எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT