நடிகை ட்விஷா

 
க்ரைம்

நடிகை ட்விஷா செலவுக்குக் கூட கணவர் பணம் தரவில்லை: சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆரில் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா கடந்த மே 12ம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.

இது தொடர்​பாக சிபிஐ பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது: ட்விஷா சர்​மா​வின் மாமியாரும், ஓய்​வு ​பெற்ற கூடு​தல் மாவட்ட நீதிப​தி​யு​மான கிரிபாலா சிங், கடந்த 2025ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்ற திரு​மணத்​தின்​ போது ரூ.2 லட்​சம் வரதட்​சணை கேட்டு கட்டாயப்படுத்​தி​யுள்​ளார்.

இதன்​படி ரூ.2 லட்​சத்தை கொடுத்​துள்​ளனர். திரு​மணம் முடிந்த ஒரு சில மாதங்​களி​லேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்​றும் மாமி​யார் கிரி​ பாலா சிங் ஆகியோ​ரால் கடுமை​யான மன உளைச்​சல் ஏற்​பட்​டுள்​ளது.

மேலும், திரு​மணத்​துக்​குப் பிறகு ட்விஷா​வின் அடிப்​படை தேவைகளுக்​குக் கூட அவரது கணவரும் மாமி​யாரும் பணம் கொடுக்க மறுத்​துள்​ளனர். இதனால், ட்விஷா​வின் பெற்​றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்​துள்​ளனர். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT